Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
உங்கள் வீட்டில் பீன்ஸ், காலிஃப்ளவர் உள்ளதா? அப்படியானால் இந்த இரண்டு காய்கறிகளையும் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையில் பொரியல் செய்யலாம். அதுவும் இதைக் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல் செய்யலாம்.
உங்களுக்கு மதிய வேளையில் என்ன பொரியல் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பீன்ஸ், காலிஃப்ளவர் உள்ளதா? அப்படியானால் இந்த இரண்டு காய்கறிகளையும் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையில் பொரியல் செய்யலாம். அதுவும் இதைக் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல் செய்தால், சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த இரண்டு காய்கறிகளுமே உடலுக்கு ஆரோக்கியமானவை என்பதால், அடிக்கடி இவற்றை உணவில் சேர்த்து வருவது நல்லது.

உங்களுக்கு செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பீன்ஸ் காபிஃப்ளவர் பொரியல் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 1
* பச்சை பீன்ஸ் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் காய்கறிகளை சரியான அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் காலிஃப்ளவர் மற்றும் பீன்ஸ் இரண்டையும், கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து மென்மையாக வேகும் வரை வேக வைத்து இறக்கிக் கொண்டு, நீரை வடிகட்டிவிட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் கறிவேப்பிலை, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் வேக வைத்துள்ள காய்கறிகளையும் சேர்த்து, உப்பு தூவி நன்கு பிரட்டி விட வேண்டும்.
* காய்கறிகளானது மசாலாவுடன் நன்கு ஒன்று சேர்ந்ததும், ஒரு 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு காலிஃப்ளவர் பீன்ஸ் பொரியல் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications