Latest Updates
-
வார ராசிபலன் ( November 22-28)- இந்த வாரம் இந்த 4 ராசிக்காரங்கள பிரச்சினைகள் விடாம துரத்தப்போகுதாம் -
சிக்கன் வாங்குனா இந்த பாலக்காடு சிக்கன் வறுவலை செஞ்சு பாருங்க - எவ்வளவு செஞ்சாலும் பத்தாது -
தேங்காயில் மூன்று கண்கள் இருப்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் ரகசியம் என்ன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
நவம்பர் 25-ல் கன்னி ராசிக்குள் நுழையும் செவ்வாய் இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளையும் கொடுக்கப்போகுதாம் -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி ராஜஸ்தான் ஸ்டைலில் வறுவல் செஞ்சு பாருங்க - பைவ் ஸ்டார் ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
1800 கோடிக்கு விற்கப்பட்ட ஹிட்லர் காலத்து அதிசய ஓவியம் - இந்த ஓவியத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
காலையில் இந்த ஒரு குழம்பை செஞ்சா போதும்... 3 வேளையும் வெச்சு சாப்பிடலாம்... -
நவம்பர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
புதாதித்ய ராஜயோகம்: டிசம்பர் மாத தொடக்கமே இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமோகமா இருக்கும்! -
டிசம்பரில் விருச்சிக ராசியில் நுழையும் புதன் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம்
செட்டிநாடு கத்திரிக்காய் அவியல் குழம்பு ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - செம சைடிஷா இருக்கும்
Chettinad Avial Kuzhambu Recipe in Tamil: காலை மற்றும் இரவு உணவுகளைப் பொறுத்தவரை என்ன சமைக்கிறோம் என்பதை விட அதற்கு என்ன சைடிஷ் செய்வது என்பதே மிகப்பெரிய கவலையாக இருக்கும். பொதுவாக இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுக்கு சட்னி அல்லது குருமா போன்றவற்றைத்தான் செய்வோம். ஆனால் எத்தனை நாளுக்குத்தான் அதையே செய்து கொண்டிருப்பது. ஏதாவது ஒரு புது சைடிஷ் செய்ய விரும்புகிறவர்களா?

உங்கள் வீட்டில் கத்திரிக்காயும், உருளைக்கிழங்கும் உள்ளதா? அப்படியானால் அதை வைத்து இந்த செட்டிநாடு ஸ்டைல் அவியல் குழம்பை முயற்சி செய்து பாருங்கள். இந்த கத்திரிக்காய் அவியல் குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் இடியாப்பம் என அனைத்திற்கும் அட்டகாசமான சைடிஷாக இருக்கும். இந்த செட்டிநாடு அவியல் குழம்பு சுவையானதாக இருப்பதோடு செய்வதற்கும் மிகவும் சுலபமானதாக இருக்கும்.
உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் கத்தரிக்காய் அவியல் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கத்திரிக்காய் அவியல் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா விழுது அரைக்க:
- 1/4 கப் துருவிய தேங்காய்
- 6 முந்திரி பருப்புகள்
- 1 டீஸ்பூன் கசகசா
- 1/4 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1/2 அங்குல துண்டு பட்டை
- 2 ஏலக்காய்
குழம்பு வைக்கத் தேவையானவை:
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 பெரிய வெங்காயம், நறுக்கியது
- 2 பழுத்த தக்காளி, நறுக்கியது
- 1 ஸ்பூன் உப்பு
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 4 கத்தரிக்காய்கள், நறுக்கியது
- 1 பெரிய உருளைக்கிழங்கு, தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கியது
- 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
செய்முறை:
- முதலில் துருவிய தேங்காய், முந்திரி, சீரகம், கசகசா, சோம்பு, இலவங்கப்பட்டை மற்றும் ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி, மென்மையான விழுதாக அரைத்துக்கொள்ளவும். இதைத் தனியே எடுத்து வைக்கவும்.
- முதலில் கத்திரிக்காயை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் சோம்பைச் சேர்க்கவும். சோம்பு பொரிந்ததும் பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து, அவை மென்மையாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்த தக்காளித் துண்டுகளைச் சேர்க்கவும். அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும். தக்காளி நன்கு வெந்து, குழையும் வரை வதக்கவும்.
- தக்காளி நன்கு குழைந்ததும் அரைத்த மசாலா விழுதையும், 2 கப் தண்ணீரையும் சேர்த்து கொதிக்க விடவும்.
- பின்னர் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து, மூடி வைத்து 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடவும். அடிப்பிடிக்காமல் இருக்க, அவ்வப்போது கிளறிவிடவும்.
- காய்கறிகள் நன்கு வெந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி, கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான செட்டிநாடு அவியல் குழம்பு ரெடி, இதை சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறவும். இதை சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
