Latest Updates
-
25 வயதிலேயே சர்க்கரை நோயா? இளம் வயதினருக்கு ஏன் இவ்வளவு சீக்கிரமாக வருகிறது? டாக்டர் விளக்கம்! -
2027-ல் 3 முறை ராசியை மாற்றும் குரு பகவான்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மலாய் சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 29, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கசப்பான அனுபவங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவானின் வக்ர பெயர்ச்சியால் கோடி நன்மைகளை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முட்டை தேங்காய் குழம்பை ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல சூப்பரா இருக்கும் -
வார ராசிபலன் ( November 29-டிசம்பர் 05)- இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
இந்தியாவிலேயே அதிக குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
காரசாரமான ஹைதராபாத் சிக்கன் கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தரமான டேஸ்ட்ல இருக்கும் -
சனிபகவானால் டிசம்பர் 11 முதல் கஷ்டங்களை அனுபவிக்கபோகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா?
நாவூறும்.. செம்மீன் சட்டிச்சோறு - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க..
Chemmeen Satti Soru Recipe In Tamil: ஒவ்வொரு வாரமும் ஒரே மாதிரி சிக்கன், மட்டனை செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் அடிக்கடி இறாலை வாங்குவீர்களா? அப்படி இறால் வாங்கும் போது, அதைக் கொண்டு பெரும்பாலும் ப்ரை, கிரேவி, குழம்பு என்று தான் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் இறாலை சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் செம்மீன் சட்டிச்சோறு செய்து சாப்பிடுங்கள்.

இது கேரளாவில் மிகவும் பிரபலமான ரெசிபி. இந்த ரெசிபி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். முக்கியமாக விடுமுறை நாளில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைத்தால், இந்த செம்மீன் சட்டிச்சோறு செய்தால் போதும், வயிறும், மனமும் நிரம்பும்.
உங்களுக்கு இந்த செம்மீன் சட்டிச்சோறு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செம்மீன் சட்டிச்சோறு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* இறால் - 300 கிராம்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* ஊற வைத்த இறால்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* வறுத்த இறால்
* வடித்த பாசுமதி அரிசி சாதம்
* வெள்ளை மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் இறாலை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள், இஞ்சி பூண்டு
பேஸ்ட், உப்பு, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு
பிரட்டி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், மிதமான தீயில் வைத்து, இறால் துண்டுகளை சேர்த்து 2-3
நிமிடம் ப்ரை செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே எண்ணெயில் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து,
சிறிது உப்பு தூவி, வெங்காயத்தை நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வறுத்த இறாலை சேர்த்து, அதோடு உதிரி உதிரியாக வடித்த
வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மிளகுத் தூள் தூவி, உயர் தீயில் வைத்து 2
நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சுவையான செம்மீன் சட்டிச்சோறு
தயார்.



Click it and Unblock the Notifications
