Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
கோதுமை மாவு இல்லாமலே சப்பாத்தி செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்களேன்...
Chapati Without Flour Recipe: நீங்கள் சப்பாத்தி பிரியரா? தினமும் ஒருமுறையாவது சப்பாத்தியை சாப்பிட்டுவிட வேண்டுமா? ஆனால் உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய கோதுமை மாவு தீர்ந்துவிட்டதா? கவலைப்படாதீர்கள். கோதுமை மாவு இல்லாமலேயே சப்பாத்தி செய்யலாம்.
அதுவும் வீட்டில் மரவள்ளிக்கிழங்கு இருந்தால், அருமையான சுவையில் சப்பாத்தியை செய்யலாம். இந்த சப்பாத்தி செய்வதற்கு அதிகம் மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை. மிகவும் சுலபமாக வெறும் 4-5 பொருட்களைக் கொண்டே சப்பாத்தியை செய்யலாம்.

உங்களுக்கு மரவள்ளிக்கிழங்கு வைத்து சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மரவள்ளிக்கிழங்கு சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு....
* மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சிறிது
சப்பாத்திக்கு...
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில்
மரவள்ளிக்கிழங்கை துண்டுகளாக்கி சேர்த்து, சிறிது உப்பு தூவி மூடி
வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து கிழங்கை ஒரு தட்டில் எடுத்து வைத்து குளிர வைக்க
வேண்டும்.
* கிழங்கு நன்கு குளிர்ந்ததும், அதன் நடுவே உள்ள நரம்பு பகுதியை
நீக்கிவிட வேண்டும்.
* பின்பு அந்த கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும். இதனால் மாவு
பிசைவதற்கு வசதியாக இருக்கும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் துருவிய கிழங்கை எடுத்து, அத்துடன் சிறிது
உப்பு, 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் சீரகம்
சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* மாவானது மிகவும் இறுக்கமாக இருந்தால், சிறிது நீரை தெளித்து,
சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் பிசைந்த மாவை சிறிது எடுத்து சப்பாத்தி போன்று தேய்த்துக்
கொள்ள வேண்டும். அப்படி தேய்க்கும் போது, அதன் முனைகள் வழக்கமான
சப்பாத்தியைப் போன்று வராது. எனவே ஒரு தட்டு கொண்டு அழகாக சப்பாத்தி
வடிவத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும்
சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி
தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியை ஒவ்வொன்றாக சேர்த்து, எண்ணெய் தடவி,
முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான
மரவள்ளிக்கிழங்கு சப்பாத்தி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications
