Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்..
Channa Chutney Recipe In Tamil: இட்லி, தோசை என்றாலே அதற்கு சைடு டிஷ்ஷாக நினைவிற்கு வருவது சட்னியாகவே இருக்கும். இந்த சட்னியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் தேங்காய் சட்னி, கார சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி, மல்லி சட்னி போன்றவை பெரும்பாலானோர் அடிக்கடி செய்யக்கூடிய சட்னிகளாகும். ஆனால் சுண்டல் சட்னி பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? என்னது சுண்டலில் சட்னியா என்று கேட்கலாம். ஆம், வேக வைத்த ஒரு கப் சுண்டல் இருந்தால், அதைக் கொண்டு சட்னி செய்யலாம். இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

இந்த சுண்டல் சட்னி குறித்து ஈரோடு அம்மாச்சி சமையல் என்னும் யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த சுண்டல் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுண்டல் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 3 கொத்து
* பூண்டு - 3 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 1 1/2 கைப்பிடி
* வேக வைத்த சுண்டல் - 1 கப் அல்லது 50 கிராம்
* தக்காளி - 2
* கொத்தமல்லி - 1/2 கைப்பிடி
* புதினா - 10 இலைகள்
* புளி - சிறிய துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன்
* பூண்டு - 1 பல் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி, வரமிளகாய்
ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் பெருங்காயத் தூள் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து
கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்த சுண்டலை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* சட்னி சீக்கிரம் கெடாமல் இருக்க, சிறிது புளியை சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* வதக்கிய பொருட்கள் குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் சேர்த்து,
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்து, தேவையான அளவு நீரை
ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு,
கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான சுண்டல் சட்னி தயார்.



Click it and Unblock the Notifications