Latest Updates
-
சர்க்கரை நோய்க்கான மருந்துகள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும் என்பது உண்மையா? கட்டுக்கதையா? -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க...
காலிஃபிளவர் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா, சூப்பரா இருக்கும்
Cauliflower Rasam Recipe in Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் ரசப் பிரியர்களா? தினமும் தவறாமல் ரசம் செய்வீர்களா? அதோடு அடிக்கடி வித்தியாசமான ரசம் ரெசிபிக்களையும் முயற்சிப்பீர்களா? அப்படியானால் இதுவரை நீங்கள் இளநீர் ரசம், மசாலா ரசம், மாங்காய் ரசம் என்று பலவிதமான வித்தியாசமான சுவையைக் கொண்ட ரசத்தை செய்திருப்பீர்கள். ஆனால் காலிஃபிளவரை வைத்தும் ரசம் செய்யலாம் என்பது தெரியுமா?

நிச்சயம் இந்த ரசத்தை நீங்கள் வீட்டில் செய்திருக்கமாட்டீர்கள். ஏன் காலிஃபிளவரை வைத்து ரசம் வைக்கலாம் என்பதையே நீங்கள் இப்போதுதான் கேள்விப்படலாம். ஏனெனில் காலிஃபிளவர் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சில்லிதான். இதை ரசமாகவும் சாப்பிடலாம், சூப்பாகவும் குடிக்கலாம். உங்களுக்கு இந்த காலிஃபிளவர் ரசத்தை சுவைக்க ஆசையாக உள்ளதா? உங்கள் வீட்டில் காலிஃபிளவரும், துவரம்பருப்பும், இந்த ரசத்தை செய்து பாருங்கள். நிச்சயம் இது உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.
உங்களுக்கு சுவையான காலிஃபிளவர் ரசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃபிளவர் ரச ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் நறுக்கிய காலிஃபிளவர்
- ¼ கப் சமைத்த துவரம் பருப்பு
- 1 ஸ்பூன் புளி
- 1 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 5 பூண்டு பல்
- ¼ ஸ்பூன் சர்க்கரை
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- ஒரு கைப்பிடி நறுக்கிய கொத்தமல்லி இலை
ரசப் பொடிக்கு:
- 1 ஸ்பூன் மிளகு
- ½ ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் தனியா
- 2 காய்ந்த மிளகாய்
தாளிக்க:
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 அங்குல துண்டு பட்டை
- ½ ஸ்பூன் சோம்பு
- 1 துண்டு கல்பாசி
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் புளியை 30 நிமிடங்கள் சூடான நீரில் ஊறவைத்து, ஒரு கப் தண்ணீர் சேர்த்து அதன் சாற்றைப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். காலிஃபிளவரை நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்சி ஜாரில் மல்லி விதைகள், மிளகு, சீரகம் மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- அதே நேரத்தில் துவரம்பருப்பை குக்கரில் வேகவைக்கவும். தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளவும்.
- 2 கப் தண்ணீரில், காலிஃபிளவர், நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் பாதியளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- காலிஃபிளவர் வெந்ததும், புளிக் கரைசலைச் சேர்க்கவும். மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் பட்டை, கல்பாசி, சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
- கொதித்துக் கொண்டிருக்கும் ரசத்தில் இந்த தாளிப்பை ஊற்றவும்.
- பின்னர் நன்றாக மசித்த வேகவைத்த பருப்பையம், அரைத்து வைத்த பொடியைச் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.
- ரசம் கொதிக்கும் போது சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பைச் சேர்க்கவும். தோலுரித்த பூண்டைச் சற்று கரகரப்பாகத் தட்டிச் சேர்க்கவும்.
- கொதிக்கும் ரசத்தில் இதைப் போட்டு, அடுப்பை அணைத்துவிடவும். கொத்தமல்லி இலைகளைத் தூவி அலங்கரிக்கவும்.
- அவ்வளவுதான் அட்டகாசமான காலிஃபிளவர் ரசம் அல்லது சூப் ரெடி!



Click it and Unblock the Notifications
