Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்... காலிஃப்ளவர் கூட்டு
Cauliflower Kootu: இன்று இரவு என்ன சமைப்பது என்று இப்போதிருந்தே யோசிக்க ஆரம்பித்துவிட்டீர்களா? உங்கள் வீட்டில் தினமும் இரவு சப்பாத்தியை செய்வீர்களா? அப்படியானால் இன்று அந்த சப்பாத்திக்கு காலிஃப்ளவர் கூட்டு செய்யுங்கள்.
இந்த கூட்டில் காலிஃப்ளவரை மட்டுமின்றி, உருளைக்கிழங்கு, கேரட் போன்ற காய்கறிகளையும் சேர்க்கலாம். முக்கியமாக இந்த கூட்டு சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்கள் வீட்டில் உள்ளோர் காய்கறிகளை அதிகம் சாப்பிடமாட்டார்களானால், இந்த காலிஃப்ளவர் கூட்டு செய்யுங்கள். இதனால் காய்கறிகளை சாப்பிடாதவர்கள் கூட, இதன் சுவையால் விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு காலிஃப்ளவர் கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காலிஃப்ளவர் - 1
* உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
* கேரட் - 1 (நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* துவரம் பருப்பு - 1/2 கப் (வேக வைத்தது)
* புளி - சிறிய எலுமிச்சை அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு...
* வரமிளகாய் - 3
* மிளகு - 10
* மல்லி விதைகள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1/2 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு,
அதில் 1 1/2 கப் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு
இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் நன்கு
கொதிக்க ஆரம்பித்ததும், அதில் உப்பு மற்றும் சிறிது மஞ்சள் தூள்
சேர்த்து இறக்கி, காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் மூடி
வைத்து, பின் நீரை வடிகட்டிவிட்டு, காலிஃப்ளவரை தனியாக எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து அரைப்பதற்கு
கொடுத்துள்ள வரமிளகாய், மிளகு, மல்லி, கடலைப் பருப்பு, பொட்டுக்கடலை
ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு பொன்னிறமாக வறுத்து,
பின் அதில் தேங்காயை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர்
ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு 4 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள்
மற்றும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து குறைவான தீயில் வைத்து
7-8 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, தக்காளியை
சேர்த்து 4-5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து, ஒரு கப் நீரை
ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து
குறைவான தீயில் 10 நிமிடம் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
* காய்கறிகள் வெந்ததும், அதில் புளிச்சாற்றினை ஊற்றி மிதமான தீயில்
வைத்து 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால்,
சுவையாக காலிஃப்ளவர் கூட்டு தயார்.
Image Courtesy: sailusfood



Click it and Unblock the Notifications