Latest Updates
-
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா? -
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...! -
ரம்ஜான் ஸ்பெஷல் ஆப்கானி மட்டன் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
இட்லிக்கு.. முந்திரி பருப்புடன் இந்த 4 பொருளை சேர்த்து அரைச்சு சாப்பிடுங்க.. டக்கரா இருக்கும்...
Cashew Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் பெரும்பாலும் இட்லி தான் செய்வீர்களா? அதற்கு சைடு டிஷ் எப்போதுமே சட்னி தான் செய்வீர்களா? அதுவும் ஒரே மாதிரியான சட்னியைத் தான் செய்வீர்களா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமான, க்ரீமியான சட்னியை செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் முந்திரி பருப்பு உள்ளதா? அப்படியெனில் அந்த முந்திரியுடன் ஒரு 4 பொருட்களை சேர்த்து வதக்கி அரைத்து, தாளித்துவிடுங்கள். இந்த முந்திரி சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையிலும் இருக்கும். முக்கியமாக வேலை செல்பவர்கள் இந்த மாதிரியான சட்னியை தெரிந்து வைத்துக் கொண்டால், சட்டுபுட்டென்று இட்லிக்கு சைடு டிஷ் செய்யலாம்.
உங்களுக்கு முந்திரி பருப்பு சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முந்திரி பருப்பு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முந்திரி - 50 கிராம்
* சின்ன வெங்காயம் - 15
* காஷ்மீரி வரமிளகாய் - 4
* புளி - 1 சிறிய துண்டு
* பூண்டு - 2 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், முந்திரி பருப்பை சேர்த்து மிதமான தீயில் வைத்து
பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சின்ன வெங்காயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து,
சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு பூண்டு, புளி சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர்
ஜாரில் போட்டு நன்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான முந்திரி பருப்பு
சட்னி தயார்.
Image Courtesy: Honest Cooking



Click it and Unblock the Notifications











