Just In
- 4 hrs ago
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 5 hrs ago
ஆண்களுக்கு பெண்கள் மீது வெறுப்பு வர உண்மையான காரணம் இதுதானாம்... பெண்களே பாத்து நடந்துக்கோங்க...!
- 5 hrs ago
தைப்பூசம் பற்றி பலருக்கு தெரியாத சுவாரஸ்யமான தகவல்கள்!
- 6 hrs ago
உங்க துணைகிட்ட 'அந்த' விஷயத்த பத்தி வெட்கப்படமா பேச இந்த வழிகள ஃபாலோ பண்ணுங்க...!
Don't Miss
- Automobiles
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- News
தமிழகத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் மீது கொலை முயற்சி வழக்குகளா? வேல்முருகன் கடும் கண்டனம்
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிம்பிளான... கேரட் வால்நட் பிரட்
கிறிஸ்துமஸ் பண்டிகை வரப்போகிறது. அனைவரும் கிறிஸதுமஸ் பண்டிகைக்கு வீட்டிலேயே கேக் செய்ய திட்டம் தீட்டியிருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு க்ரீம் கேக் எதுவும் செய்ய பிடிக்காவிட்டால், ஒரு வித்தியாசமான அதே சமயம் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒரு பிரட் ரெசிபியை எப்படி செய்வதென்று தமிழ் போல்ட் ஸ்கை கீழே கொடுத்துள்ளது. அது வேறொன்றும் இல்லை, அது தான் கேரட் வால்நட் பிரட் ரெசிபி. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் அட்டகாசமாக இருக்கும்.
முக்கியமாக இது பண்டிகைக் காலங்களில் மட்டுமின்றி, சாதாரண நாட்களில் மாலை வேளையில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்க ஏற்ற ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட. இப்போது கேரட் வால்நட் பிரட் ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 2
* சர்க்கரை - 200 கிராம்
* வெஜிடேபிள் ஆயில் - 160 மிலி
* வென்னிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்
* மைதா - 1 1/2 கப்
* பேக்கிங் சோடா - 3/4 டீஸ்பூன்
* பட்டை தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* துருவிய கேரட் - 1 1/2 கப்
* வால்நட்ஸ் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் மைக்ரோஓவனை 180 டிகிரி செல்சியல் சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் பிரட் செய்யும் பேனை எடுத்து, அதன் மேல் பார்ச்மென்ட் பேப்பரை விரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் எண்ணெய், சர்க்கரை, வென்னிலா எசன்ஸ் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு ஒருசேர கலந்து விட வேண்டும்.
* பிறகு மற்றொரு பௌலில் மைதா, பட்டை தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் இந்த மைதா கலவையை முட்டை கலவையுடன் சேர்த்து நன்கு கரண்டி கொண்டு பிரட்டி விட வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய கேரட், வால்நட்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் இந்த மாவை ரெடியாக வைத்துள்ள கேக் பேனில் ஊற்றி, அதன் மேல் வால்நட்ஸ் தூவி, மைக்ரோஓவனில் வைத்து, 50 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை பேக் செய்து எடுக்க வேண்டும்.
* இறுதியில் ஓவனில் உள்ள பேனை வெளியே எடுத்து 15 நிமிடம் குளிர வைத்து, பின் கத்தியால் துண்டுகளாக்கினால், சிம்பிளான கேரட் வால்நட் பிரட் தயார்.