Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
கேரட் வாங்குனா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் தொக்கு செய்யுங்க... இட்லி, தோசைக்கு சூப்பர் சைடிஷா இருக்கும்...!
Carrot Thokku Recipe in Tamil: பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி மற்றும் சாம்பார் போன்றவற்றைத்தான் அனைத்து வீடுகளிலும் சைடிஷாக செய்வார்கள். எதுவுமே இல்லாத சமயத்தில் இட்லி பொடி கூட வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் யாரும் இட்லி, தோசைக்கு தொக்கு முயற்சித்திருக்க மாட்டார்கள். ஏனெனில் தொக்கு என்றாலே பொதுவாக அது சாதத்திற்கு என்ற எண்ணம் நம்மிடம் வந்து விட்டது.
உண்மையில் இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு தொக்கு வகைகள் அட்டகாசமாக இருக்கும். அதிலும் நாம் இப்போது பார்க்கப்போகும் கேரட் தொக்கை 1 வாரம் வரை கூட வைத்து சாப்பிடலாம். இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும், மேலும் இது மிகவும் ஆரோக்கியமானது.

உங்களுக்கு கேரட் தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆரோக்கியமான கேரட் தொக்கின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கேரட் - கால் கிலோ
- புளி - நெல்லிக்காய் அளவு
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
- வெந்தயம் - கால் ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
- கேரட்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து ஈரம் போகும் படி நன்றாகத் துடைத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் தோலை சீவி விட்டு நன்றாக துருவி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வெறுமனே பெருங்காயம், வெந்தயத்தை வறுத்துப் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்தவுடன் கடுகை போட்டு வெடிக்க விடவும்.
- கடுகு நன்கு பொறிந்தவுடன் கேரட் துருவலை சேர்த்து போட்டு நன்கு வதக்கவும். கேரட் நன்கு சுருங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அனைத்தையும் போட்டு நன்கு வதக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் நன்றாக வதங்கியவுடன் அரை டம்ளர் தண்ணீரில் கரைத்த புளியை ஊற்றவும்.
- கலவை நன்றாக கொதித்து கெட்டியாக சுருண்டு வரும் வரையில் வேக விடவும். இடையிடையே நன்றாக கிளறி விடவும்.
- இறுதியாக அரைத்து வைத்த வெந்தயம், பெருங்காயப் பொடியைப் போட்டுக் கிளறி இறக்கவும்.
- ஆறியவுடன் சுத்தமான கண்ணாடி பாட்டில் அல்லது ஜாடிகளில் பத்திரப்படுத்தி வைத்தால் இதை பல நாட்கள் வைத்து சாப்பிடலாம்.
- கேரட் இயல்பாகவே இனிப்புச் சுவை உடையது என்பதால் அதிக காரத்தை விரும்புபவர்கள் அதற்கு ஏற்றவாறு மிளகாய் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
- கேரட் பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருப்பதால் இதை அடிக்கடி குழந்தைகளுக்கு செய்து கொடுக்கவும்.
- இந்த கேரட் தொக்கு இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications