Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... கேரட் சட்னி
உங்கள் வீட்டில் கேரட் அதிகமாக உள்ளதா? உங்கள் குழந்தைகள் கேரட் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால், அந்த கேரட்டைக் கொண்டு அட்டகாசமான சுவையைக் கொண்ட கேரட் சட்னி செய்யுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கேரட் அதிகமாக உள்ளதா? உங்கள் குழந்தைகள் கேரட் விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால், அந்த கேரட்டைக் கொண்டு அட்டகாசமான சுவையைக் கொண்ட கேரட் சட்னி செய்யுங்கள். கேரட் சட்னியானது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இதை செய்வதும் மிகவும் சுலபம். குறிப்பாக இந்த சட்னி வேலை முடிந்து வீட்டிற்கு வருவோர் வேகமாக செய்து சாப்பிடும் வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டது.

உங்களுக்கு கேரட் சட்னி எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3-4
* கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 10
* இஞ்சி - 2 இன்ச்
* பூண்டு - 5 பல்
* கேரட் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கேரட், தக்காளி சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு அரைத்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கி, அதை சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கேரட் சட்னி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications