Latest Updates
-
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள்
பிரட் இருந்தா.. ஒருடைம் இந்த கேரமல் பாப்கார்னை செஞ்சு பாருங்க.. மொறுமொறுன்னு டேஸ்ட்டா இருக்கும்..
Caramel Bread Popcorn Recipe In Tamil: உங்கள் வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு ஒரு வித்தியாசமான ஸ்வீட் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அதுவும் இதுவரை உங்கள் வீட்டில் இருப்போருக்கு செய்து கொடுக்காத ஒன்றாக இருக்க வேண்டுமா? உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? அப்படியானால் அந்த பிரட் கொண்டு வித்தியாசமான கேரமல் பிரட் பாப்கார்னை செய்து கொடுங்கள்.
இந்த பாப்கார்ன் செய்வதற்கு வீட்டில் உள்ள 4 பொருட்களே போதுமானது. குறைவான செலவில் டேஸ்ட்டியான ஸ்வீட்டை செய்து, உங்கள் வீட்டில் இருப்போரை அசத்தலாம். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு அருமையாக இருக்கும். ஒருமுறை இதை செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு கேரமல் பிரட் பாப்கார்ன்னை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரமல் பிரட் பாப்கார்ன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 8 பெரிய துண்டுகள்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
கேரமல் சிரப் செய்வதற்கு...
* சர்க்கரை - 1/2 கப்
* தண்ணீர் - 1/4 கப்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 2 சிட்டிகை
செய்முறை:
* முதலில் பிரட்டை எடுத்து துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் அவற்றை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடித்து, ஒரு கிண்ணத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அனைத்து பிரட் துண்டுகளையும் பொடித்த பின், அதில் கொஞ்சம் கொஞ்சமாக
நீரை ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி உருண்டைகளாக்கி, ஒரு
தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும், உருண்டைகளைப் போட்டு, மிதமான
தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து, ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 கப் சர்க்கரை
மற்றும் 1/4 கப் நீரை ஊற்றி, அதோடு 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் மற்றும்
2 சிட்டிகை உப்பு சேர்த்து, சர்க்கரை கரைந்து, லேசாக பொன்னிறமாக மாறத்
தொடங்கும் போது, மிதமான தீயில் வைத்து, தொடர்ந்து கிளறி விட
வேண்டும்.
* நன்கு பொன்னிறமாக வந்ததும், பதம் பார்க்க ஒரு கிண்ணத்தில் அந்த
சிரப்பை விடும் போது, உடையும் பதத்தில் வந்தால், சரியான பதத்திற்கு
வந்துவிட்டது என்று அர்த்தம்.
* அதன் பின் உருண்டைகளை அதில் சேர்த்து நன்கு கிளறி இறக்கி, நெய்
தடவிய ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கையில் எண்ணெய் தடவி, அந்த
உருண்டைகளை பிரித்துவிட்டு, குளிர வைத்தால், சுவையான கேரமல் பிரட்
பாப்கார்ன் தயார்.



Click it and Unblock the Notifications