Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
2 உருளைக்கிழங்கும் 1 குடைமிளகாயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. டக்கரா இருக்கும்..
Capsicum Bajji Recipe In Tamil: மாலை வேளையில் பள்ளி முடிந்து பசியுடன் வீட்டிற்கு வரும் குழந்தைகளின் பசியை போக்க வேண்டுமா? அதுவும் உங்கள் பிள்ளைகள் சூடாகவும், மொறுமொறுவென்றும் தான் சாப்பிட விரும்புவார்களா? உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கும், குடைமிளகாயும் உள்ளதா?
அப்படியானால் அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு பஜ்ஜியை செய்து கொடுங்கள். அதுவும் இந்த பஜ்ஜியில் உருளைக்கிழங்கு மசாலா செய்து, குடைமிளகாயில் வைத்து , பஜ்ஜி மாவில் பிரட்டி பொரித்து எடுத்து சாப்பிடும் போதும், சுவை வேற லெவலில் இருக்கும். முக்கியமாக 1 கப் காபி/டீயை குடித்து, 2 பஜ்ஜியை சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு ஸ்டப்டு குடைமிளகாய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு ஸ்டப்டு குடைமிளகாய் பஜ்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய குடைமிளகாய் - 1
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உருளைக்கிழங்கு மசாலாவிற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* வேக வைத்த உருளைக்கிழங்கு - 2 (மசித்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
பஜ்ஜி மாவிற்கு...
* கடலை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் குடைமிளகாயை எடுத்து அதன் விதைகளை நீக்கிவிட்டு, சற்று
தட்டையான மற்றும் நீளமான துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் 2 உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேக வைத்து இறக்கி,
தோலுரித்து மசித்து, அதையும் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய
வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள் சேர்த்து வதக்கி, மசித்து வைத்துள்ள
உருளைக்கிழங்கை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு பிரட்டி
விட்டு வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு அகலமான கிண்ணத்தை எடுத்து, அதில் கடலை மாவு, அரிசி
மாவு, மிளகாய் தூள், பெருங்காயத் தூள், பேக்கிங் சோடா மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு நறுக்கிய குடைமிளகாய் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து அதன்
மேல் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பஜ்ஜியை பொரிப்பதற்கு
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒவ்வொரு குடைமிளகாயை
துண்டையும் எடுத்து, பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு,
முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான உருளைக்கிழங்கு
ஸ்டப்டு குடைமிளகாய் பஜ்ஜி தயார்.



Click it and Unblock the Notifications









