Latest Updates
-
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
முட்டைக்கோஸ் வடை
பலருக்கு தினமும் ஒரே மாதிரி வடை செய்து சுவைத்து அலுத்துப் போயிருக்கும். சற்று வித்தியாசமான வடை சாப்பிட வேண்டுமானால், முட்டைக்கோஸ் கொண்டு வடை செய்யுங்கள்.
மழை பெய்யும் போது, நன்கு சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதாவது சாப்பிட தோன்றும். குறிப்பாக பலருக்கு வடை சாப்பிட ஆசையாக இருக்கும். தினமும் ஒரே மாதிரி வடை செய்து சுவைத்து அலுத்துப் போயிருக்கும். சற்று வித்தியாசமான வடை சாப்பிட வேண்டுமானால், முட்டைக்கோஸ் கொண்டு வடை செய்யுங்கள். இந்த வடை மிகவும் சுவையாக இருப்பதோடு, விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் வடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் வடையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 1.5 கப்
* முட்டைக்கோஸ் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகா - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - ஒரு கையளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அதை நன்கு கழுவி, பிளெண்டரில் போட்டு தேவையான நேரத்தில் லேசாக நீர் தெளித்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமாக நீரை சேர்த்து விட வேண்டாம்.
* பின்பு ஒரு பௌலில் அரைத்த உளுத்தம் மாவு, முட்டைக்கோஸ், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், நீரில் கையை நனைத்து, சிறிது மாவை எடுத்து, அதன் நடுவே ஒரு துளையிட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், முட்டைக்கோஸ் வடை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications