Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
Muttaikose Kadalai Paruppu Kootu Recipe In Tamil: உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் செய்தாலே, யாரும் சாப்பிடமாட்டார்களா? அப்படிப்பட்டவர்களை முட்டைக்கோஸ் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் அந்த முட்டைக்கோஸ் உடன் கடலைப் பருப்பை சேர்த்து கூட்டு செய்யுங்கள். இந்த முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ஒருமுறை இப்படி மசாலா அரைத்து சேர்த்து செய்யுங்கள். இப்படி செய்யும் போது பிடிக்காதவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதுவும் இதை சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக மட்டுமின்றி, சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.

உங்களுக்கு இந்த முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் கடலைப்பருப்பு கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு..
* கடலைப் பருப்பு - 1/4 கப் (1 மணிநேரம் ஊற வைத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சிறிது
மசாலா அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* முட்டைக்கோஸ் - 250 கிராம் (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* வேக வைத்த கடலைப் பருப்பு
* உப்பு - சுவைக்கேற்ப
* அரைத்த மசாலா
* கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை நீரில் 2 முறை கழுவி, பின் சுத்தமான நீரை
ஊற்றி 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஊற வைத்த பருப்பை குக்கரில் நீருடன் அப்படியே சேர்த்து,
அத்துடன் தேவையான அளவு நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு
சேர்த்து குக்கரை மூடி, அடுப்பில் வைத்து 1 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி, கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், பெருங்காயத்
தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்து நன்கு 3-4 நிமிடம்
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து நன்கு கிளறி,
மூடி வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்துள்ள பருப்பை நீருடன் அப்படியே ஊற்றி கிளறி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து, 5 நிமிடம் நீர் ஓரளவு
வற்றும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து, கறிவேப்பிலையை
தூவி, பச்சை வாசனை போக நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான
முட்டைக்கோஸ் கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications