Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பட்டர் பீன்ஸ் குருமா
சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை போன்றவற்றிற்கு பட்டர் பீன்ஸ் குருமா அட்டகாசமாக இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாகவும் இருக்கும்.
சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை போன்றவற்றிற்கு பட்டர் பீன்ஸ் குருமா அட்டகாசமாக இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் சுவையாகவும் இருக்கும். முக்கியமாக பட்டர் பீன்ஸ் குருமா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதால், பேச்சுலர்கள் கூட இதை முயற்சிக்கலாம்.

உங்களுக்கு பட்டர் பீன்ஸ் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டர் பீன்ஸ் குருமாவின் செய்முறைப் படித்து செய்து சுவையுங்கள். முக்கியமாக இந்த ரெசிபியை முயற்சித்த பின் எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: ருசியான... மீல்மேக்கர் கிரேவி
தேவையான பொருட்கள்:
* பட்டர் பீன்ஸ் - 1 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1/2 இன்ச்
* பூண்டு - 5 (பொடியாக நறுக்கியது)
அரைப்பதற்கு...
* தேங்காய் - 3/4 கப்
* முந்திரி - 3
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பட்டர் பீன்ஸின் தோலை நீக்கி, தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸர் ஜாரில் போட்டு, சிறிது நீர் ஊற்றி, நன்கு பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு மென்மையாக வதக்கவும்.
* பிறகு மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து, 2 கப் நீர் ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
* பின்பு எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், பட்டர் பீன்ஸை சேர்த்து, குக்கரை மூடி குறைவான தீயில் 2 விசில் விட்டு இறக்கவும்.
* இறுதியில் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பட்டர் பீன்ஸ் குருமா ரெடி!



Click it and Unblock the Notifications
