Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
2 முட்டை இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல பசங்களுக்கு இப்படி செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..
Bun Omelette Recipe In Tamil: பள்ளி முடிந்து பசியுடன் வரும் பிள்ளைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டை உள்ளதா? அப்படியானால் அந்த முட்டைகளைக் கொண்டு வழக்கமாக செய்வது போன்று ஆம்லெட்டுகளை செய்து கொடுக்காமல், ஒருமுறை அந்த முட்டைகளைக் கொண்டு 5-ஸ்டார் ஹோட்டல்களில் கொடுக்கப்படும் ஆம்லெட்டை செய்து கொடுங்கள்.
இந்த ஆம்லெட் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும். இப்படி ஆட்லெட்டுகளை செய்து கொடுக்கும் போது, பிள்ளைகள் மீண்டும் மீண்டும் செய்து கொடுக்க கேட்பார்கள். குறிப்பாக இதை மாலை வேளையில் ஸ்நாக்ஸாக மட்டுமின்றி, காலை வேளையில் டிபனாகவும் சாப்பிடலாம்.

உங்களுக்கு பன் ஆம்லெட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன் ஆம்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* வெண்ணெய்/எண்ணெய் - சிறிது
* தனி மிளகாய் தூள் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு முட்டையை உடைத்து, வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கருவை
தனித்தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வெள்ளைக்கருவை மட்டும் பீட்டர் கொண்டு நன்கு நுரைக்கட்டி வரும்
வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மஞ்சள் கருவில் சிறிது உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அடித்து வைத்துள்ள வெள்ளைக்கருவுடன் அடித்து வைத்துள்ள மஞ்சள்
கருவை சேர்த்து லேசாக கிளறி விட வேண்டும்.
* பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் அல்லது எண்ணெய்
ஊற்றி பரப்பி, அடித்து வைத்துள்ள வெள்ளைக்கருவை ஊற்றி பரப்பி, மேலே
சிறிது மிளகாய் தூளை தூவி மூடி வைத்து 5-6 நிமிடம் மிதமான தீயில்
வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் அதை திருப்பிப் போடாமல், மடித்து விட்டு, திருப்பி திருப்பி
போட்டு வேக வைத்து எடுத்தால், மிருதுவான பன் ஆம்லெட் தயார்.



Click it and Unblock the Notifications





