For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடைத்த கோதுமை பாயாசம் ரெசிபி /கோதி பாயாசம் அல்லது உடைத்த கோதுமை கீர்

Posted By: R. SUGANTHI Rajalingam
|
செய்முறை உடைத்த கோதுமை பாயாசம் ரெசிபி | உடைத்த கோதுமை பாயாசம் ரெசிபி | Boldsky

உடைத்த கோதுமை பாயாசம் ஒரு சுவையான ரெசிபி மட்டுமில்லாமல் ஆரோக்கியமான ரெசிபியும் கூட. அப்படியே அதன் க்ரீமி தன்மையும், நறுமணமிக்க ஏலக்காயின் மணமும் வீச நெய் சொட்ட சொட்ட தித்திக்கும் சுவையுடன் இருக்கும் இந்த பாயாசம் எல்லோருக்கும் விருப்பமான ஒன்றாகவும் இருக்கும். நமது வயிற்றை நிரப்புவதோடு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. குறைந்த கலோரியை கொண்டுள்ள இந்த சுவையான கீர் உங்கள் டயட் பழக்கத்திலும் கண்டிப்பாக இடம் பெற்று விடும்.

இந்த டிசர்ட் குறைந்த கலோரியைக் கொண்டுள்ளதால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் கூட தாராளமாக இதை உண்ணலாம். ஆனால் இதன் சுவை மட்டும் கண்டிப்பாக நம் நாவை தித்திப்பில் ஆழ்த்தி விடும்.
இந்த பாயாசத்தை கோதி ஹக்கி, ஸ்வீட் ஹக்கி, கோதி பாயாசம் என்று நிறைய பேர்களில் அழைக்கின்றனர். தென் மாநிலங்களில் நடைபெறும் பண்டிகைகள் சுப நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக இந்த பாயாசம் இடம்பெற்று விடும். குறிப்பாக கர்நாடகாவில் இது ஒரு ஸ்பெஷல் ரெசிபி.
நமது உடலுக்கும் ஏராளமான நன்மைகளை தரும் இந்த டிசர்ட் கண்டிப்பாக உங்களுக்கும் பிடிக்கும்.

சரி வாங்க இப்பொழுது இந்த கோதி பாயாச ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

கோதி பாயாச ரெசிபி
உடைத்த கோதுமை பாயாசம் ரெசிபி /உடைத்த கோதுமை கீர் ரெசிபி /கோதி பாயாச ரெசிபி /கோதி பாயாச கீர் /உடைத்த கோதுமை கீர் செய்வது எப்படி /உடைத்த கோதுமை பாயாசம் செய்முறை விளக்கம் /உடைத்த கோதுமை பாயாசம் வீடியோ ரெசிபி

Prep Time
1 Hours15 Mins
Cook Time
30M
Total Time
1 Hours45 Mins

Recipe By: காவ்யா

Recipe Type: டிசர்ட்

Serves: 2

Ingredients
  • உடைத்த கோதுமை - 1 கப்

    உலர்ந்த பழங்கள் (பாதாம் பருப்பு + முந்திரி பருப்பு + உலர்ந்த திராட்சை பழங்கள்) - 8-10 ஒவ்வொன்றும்

    வெல்லம் - 1 கப்

    நெய் - 2 டேபிள் ஸ்பூன்

    தேங்காய் துருவல் - 1 கப்

    பால் - 1/2 பெளல்

    தண்ணீர் - 3 கப்

    பாப்பி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்

    ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
  • 1. ஒரு பெளலை எடுத்து கொள்ளுங்கள். அதில் உடைத்த கோதுமை மற்றும் அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.

    2. ஒரு குக்கரை எடுத்து கொள்ளுங்கள். அதில் இப்பொழுது ஊற வைத்த உடைத்த கோதுமையை குக்கரில் சேர்க்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து பருப்பு வேகவைப்பது போல, 3 விசில் வரும்வரை வேகவிடவும்.

    3. விசில் வந்ததும் குக்கரைத் திறக்காமல் அப்படியே பத்து நிமிடங்கள் வரை ஆறவிடுங்கள்.

    4. அது ஆறிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அடுப்பில் கடாயை வைத்து கசகசாவை லேசாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

    5. அதே கடாயில், வெல்லத்தை சேருங்கள். அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள் 10 நிமிடங்கள் வரை வெல்லம் முழுவதுமாக கரையும் வரை சூடுபடுத்தவும்.

    6. வெல்லப்பாகு ரெடியாகிக் கொண்டிருக்கும்போதே ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்க வேண்டும்.

    7. இந்த அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.

    8. மூடியைக் கொண்டு மூடி மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிடவும். அதன்பின், அந்த கலவையோடு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவிட்டதும் ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.

    9. அடுத்ததாக,நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும். அதோடு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு,பின் கடைசியாக அதில் பால் சேருங்கள். பாலை நன்கு கலந்துவிட்ட பின், 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேகவிட்டு இறக்குங்கள்.

    10. தித்திக்கும் கோதி பாயாச ரெடி...

    11. பாயாசத்தை வேறு பௌலிற்கு மாற்றி பின் பரிமாறலாம்.

Instructions
  • 1. பாலை காய்ச்சும் போது தொடர்ந்து கிளறிக் கொண்டே இருந்தால் கட்டிகள் இல்லாமல் இருக்கும்.
  • 2. உடைத்த கோதுமையை குக்கரில் வேக வைப்பதற்கு முன் ஊற வைத்து கொண்டால் சீக்கிரமாக வெந்து விடும்.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 கப்
  • கலோரிகள் - 382.20 கலோரிகள்
  • கொழுப்பு - 18.61கிராம்
  • புரோட்டீன் - 4.92 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 48.68 கிராம்
  • நார்ச்சத்து - 2.07 கிராம்

படத்துடன் செய்முறை விளக்கம் : உடைத்த கோதுமை பாயசம் செய்வது எப்படி

1. ஒரு பெளலை எடுத்து கொள்ளுங்கள். அதில் உடைத்த கோதுமை மற்றும் அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.

2. ஒரு குக்கரை எடுத்து கொள்ளுங்கள். அதில் இப்பொழுது ஊற வைத்த உடைத்த கோதுமையை குக்கரில் சேர்க்கவும். அதனுடன் தண்ணீர் சேர்த்து பருப்பு வேகவைப்பது போல, 3 விசில் வரும்வரை வேகவிடவும்.

3. விசில் வந்ததும் குக்கரைத் திறக்காமல் அப்படியே பத்து நிமிடங்கள் வரை ஆறவிடுங்கள்.

4. அது ஆறிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், அடுப்பில் கடாயை வைத்து கசகசாவை லேசாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

5. அதே கடாயில், வெல்லத்தை சேருங்கள். அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள் 10 நிமிடங்கள் வரை வெல்லம் முழுவதுமாக கரையும் வரை சூடுபடுத்தவும்.

6. வெல்லப்பாகு ரெடியாகிக் கொண்டிருக்கும்போதே ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்க வேண்டும்.

7. இந்த அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.

8. மூடியைக் கொண்டு மூடி மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிடவும். அதன்பின், அந்த கலவையோடு வேகவைத்த உடைத்த கோதுமையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கிளறி 5 நிமிடங்கள் வரை வேகவிட்டதும் ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.

9. அடுத்ததாக,நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை சேர்க்கவும். அதோடு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு,பின் கடைசியாக அதில் பால் சேருங்கள். பாலை நன்கு கலந்துவிட்ட பின், 5 நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேகவிட்டு இறக்குங்கள்.

10. தித்திக்கும் கோதி பாயாச ரெடி...

11. பாயாசத்தை வேறு பௌலிற்கு மாற்றி பின் பரிமாறலாம்.

[ 5 of 5 - 98 Users]
Read more about: ரெசிபி sweet payasam
English summary

உடைத்த கோதுமை பாயாசம் ரெசிபி /கோதி பாயாசம் அல்லது உடைத்த கோதுமை கீர்

Broken wheat payasam or broken wheat kheer has the name and fame of being the ultimate bowl of comfort food with its rich and creamy texture, laced with the aroma of cardamom and ghee plus nourishing your body with the loaded nutrients of broken wheat, a healthy and low-calorie dessert fix to make peace with your diet chart as well.
Story first published: Monday, March 12, 2018, 9:54 [IST]
Desktop Bottom Promotion