Latest Updates
-
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம்
சப்பாத்திக்கு ப்ராக்கோலியை இந்த மாதிரி பக்கோடா செஞ்சு.. மசாலா செய்யுங்க.. அருமையா இருக்கும்...
Broccoli Pakoda Masala Recipe In Tamil: இன்று இரவு என்ன சமையல் செய்வது என்று யோசிக்கிறீர்களா? சப்பாத்தி செய்வதாக இருந்தால், என்ன சைடு டிஷ் செய்வது என்று யோசனை செய்கிறீர்களா? உங்கள் வீட்டில் ப்ராக்கோலி உள்ளதா?
அப்படியானால் அந்த ப்ராக்கோலியைக் கொண்டு பக்கோடா செய்து, மசாலா செய்யுங்கள். இந்த ப்ராக்கோலி பக்கோடா மசாலா சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சிம்பிளாகவும் இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ப்ராக்கோலி பக்கோடா மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி பக்கோடா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பக்கோடாவிற்கு...
* ப்ராக்கோலி - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
மசாலாவிற்கு...
* தயிர் - 1 கப்
* தண்ணீர் - 3/4 கப்
* கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பக்கோடாவிற்கு கொடுத்துள்ள
ப்ராக்கோலி, வெங்காயம், அரிசி மாவு, கடலை மாவு, பேக்கிங் சோடா,
எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு
மற்றும் சிறிது நீரை ஊற்றி சற்று கெட்டியாக பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள பக்கோடா கலவையை
சிறிது சிறிதாக எடுத்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க
வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் பக்கோடாக்களாக போட்டு
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து அதில் கடலை மாவை சேர்த்து தொடர்ந்து கிளறி விட
வேண்டும்.
* நன்கு பொன்னிறமானதும், அதில் அடித்து வைத்துள்ள தயிர், மஞ்சள் தூள்,
மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து 4-5
நிமிடம் கிளறி விட வேண்டும். அதன் பின் தேவையான அளவு நீரை ஊற்ற
வேண்டும்.
* அடுத்து சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, பக்கோடாவை சேர்த்து
பிரட்டி, 2-3 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைத்து
இறக்கினால், சுவையான ப்ராக்கோலி பக்கோடா மசாலா தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications