Latest Updates
-
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்..
மொறுமொறுப்பான... ப்ராக்கோலி மசாலா வடை
உங்கள் வீட்டில் உள்ளோர் மாலை வேளையில் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் இருப்போர் வடையை அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? உங்கள் வீட்டில் ப்ராக்கோலி உள்ளதா? அப்படியானால் அந்த ப்ராக்கோலியைக் கொண்டு அருமையான சுவையில் மசாலா வடையை செய்து கொடுங்கள். இந்த ப்ராக்கோலி மசாலா வடை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
ப்ராக்கோலியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அடிக்கடி ப்ராக்கோலியை உணவில் சேர்ப்பது நல்லது. உங்களுக்கு ப்ராக்கோலி மசாலா வடை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி மசாலா வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* ப்ராக்கோலி - 250 கிராம்
* பாசிப் பருப்பு - 1/4 கப்
* கடலை பருப்பு - 1/4 கப்
* துவரம் பருப்பு - 1/4 கப்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் கடலை பருப்பு, பாசி பருப்பு மற்றும் துவரம் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* ஒரு மணிநேரம் கழித்து, பருப்புக்களை நன்கு கழுவி, அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சோம்பு, வரமிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கொரகொரவென்று அரைத்து, அதை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும் .
* பின்பு ப்ராக்கோலியை ஜாரில் போட்டு ஒருமுறை அரைத்து, அதையும் பருப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் நறுக்கிய வெங்காயம், புதினா இலைகளை சேர்த்து நன்கு கையால் பிசைய வேண்டும்.
* பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ப்ராக்கோலி மசாலா வடை தயார்.
குறிப்பு:
* வடையில் புதினாவை சேர்த்தால், ப்ளேவர் இன்னும் சூப்பராக இருக்கும்.
* வடை கலவையானது கெட்டியாக இருக்க வேண்டும். அப்படியானால் தான் வடை மொறுமொறுவென்று இருக்கும்.
* ஒருவேளை வடை மசாலா மிகவும் நீராக இருந்தால், சிறிது அரிசி மாவை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.
Image Courtesy: premasculinary



Click it and Unblock the Notifications