Latest Updates
-
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம்
சிம்பிளான மற்றும் சுவையான... ப்ராக்கோலி கபாப்
உங்கள் வீட்டில் ப்ராக்கோலி உள்ளதா? அப்படியானால் அந்த ப்ராக்கோலியைக் கொண்டு சுவையான கபாப் செய்து சாப்பிடுங்கள். இந்த ப்ராக்கோலி கபாப்பை ஓவனிலும் செய்யலாம் அல்லது கேஸ் அடுப்பிலும் செய்யலாம்.
தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. பலருக்கும் மழைப் பெய்யும் போது சூடாகவும், மொறுமொறுப்பாகவும், காரமாகவும் எதையாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றும். உங்களுக்கும் அப்படி தோன்றுகிறதா? உங்கள் வீட்டில் ப்ராக்கோலி உள்ளதா? அப்படியானால் அந்த ப்ராக்கோலியைக் கொண்டு சுவையான கபாப் செய்து சாப்பிடுங்கள். இந்த ப்ராக்கோலி கபாப்பை ஓவனிலும் செய்யலாம் அல்லது கேஸ் அடுப்பிலும் செய்யலாம்.

உங்களுக்கு ப்ராக்கோலி கபாப் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி கபாப் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ப்ராக்கோலி - 3 கப் (பொடியாக நறுக்கியது)
* சீஸ் - 1 கப் (தருவியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* முட்டை - 2
* பிரட் தூள் - 1 கப்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஓவனை 200 டிகிரி C-யில் சூடேற்ற வேண்டும். அதன் பின் பேக்கிங் ட்ரேயில் எண்ணெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ப்ராக்கோலியை போட்டு 3 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு ப்ராக்கோலியை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் வேக வைத்த ப்ராக்கோலியை எடுத்து, அதில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் உப்பு, சீஸ், பிரட் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கட்லெட் போன்று தட்டி, பேக்கிங் ட்ரேயில் வைக்க வேண்டும்.
* பின் அந்த பேக்கிங் ட்ரேயை ஓவனில் 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஓவனில் க்ரில் மோடை தேர்வு செய்து, ட்ரேயை மீண்டும் ஓவனில் வைத்து 4-5 நிமிடம் க்ரில் செய்து எடுத்தால், சுவையான ப்ராக்கோலி கபாப் தயார்.
குறிப்பு:
உங்கள் வீட்டில் ஓவன் இல்லாவிட்டால், பேனில் இந்த கபாப்களைப் போட்டு முன்னும், பின்னும் பொன்னிறமாக ப்ரை செய்யலாம்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications









