Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
மீந்து போன சப்பாத்தியுடன், 2 முட்டையும், 2 கத்திரிக்காயும் இருந்தா போதும்.. புதுமையான டிபன் செஞ்சுடலாம்...
Brinjal Egg Roll Recipe In Tamil: தினமும் ஒரே மாதிரி இட்லி, தோசை, சப்பாத்தி என்று சாப்பிட்டு போடித்துவிட்டதா? சற்று புதுமையான காலை டிபனை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இரவு சுட்ட சப்பாத்தி உள்ளதா?
அத்துடன் முட்டையும், கத்திரிக்காயும் இருந்தால், புதுமையான சுவையில் ஒரு கத்திரிக்காய் முட்டை ரோல் செய்யலாம். இந்த ரெசிபி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் ஈஸியாகவும் இருக்கும்.

உங்களுக்கு கத்திரிக்காய் முட்டை ரோல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கத்திரிக்காய் முட்டை ரோல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* முட்டை - 2
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கேரட் - 1 (துருவியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் - தேவையான அளவு
* மீந்து போன சப்பாத்தி
செய்முறை:
* முதலில் கத்திரிக்காயை நீரில் கழுவிவிட்டு, அதை மெல்லிய வட்டத்
துண்டுகளாக வெட்டி நீரில் போட்டு அலசி, நீரை வடிகட்டிவிட
வேண்டும்.
* பின் அந்த கத்திரிக்காயுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சுவைக்கேற்ப
உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்த பிரட்டி, 5 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் மஞ்சள் தூள்,
மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு அத்துடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய வெங்காயம்,
கொத்தமல்லியைத் தூவி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி
பரப்பிவிட்டு, பின் அதில் கத்திரிக்காய் துண்டுகளை போட்டு, முன்னும்,
பின்னும் 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதன் மேல் பாதி முட்டை கலவையை ஊற்றி, 30 நொடிகள் வேக வைத்து,
பின் அதன் மேல் மீந்து போன சப்பாத்தி இருந்தால், அதை வைத்து அழுத்தி,
30 நொடிகள் வேக வைத்து எடுத்தால், சுவையான கத்திரிக்காய் முட்டை ரோல்
தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications