Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
வீட்டிலேயே சுவையான பிரட் பிட்சா செய்வது எப்படி?
பிட்சாவை நாம் பலவாறு செய்யலாம். அதுவும் உங்கள் வீட்டில் பிரட் இருந்தால், அந்த பிரட் கொண்டு பிரட் பிட்சா செய்யலாம். இந்த பிரட் பிட்சா மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒரு நல்ல ஸ்நாக்ஸாக இருக்கும்.
உங்கள் குழந்தைகள் பிட்சாவை அதிகம் விரும்பி சாப்பிடுவார்களா? அடிக்கடி பிட்சா வாங்கித் தர உங்களை தொல்லை செய்வார்களா? கடைகளில் விற்கப்படும் பிட்சாக்களை அதிகம் வாங்கி சாப்பிட்டால், அதன் விளைவால் உடல் பருமன் பிரச்சனையை மட்டுமின்றி, இன்னும் பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். ஆனால் அந்த பிட்சாவை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் தயாரித்து சாப்பிட்டால், எவ்வித பிரச்சனையும் இல்லை.

உங்களுக்கு வீட்டிலேயே எப்படி பிட்சா செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? பிட்சாவை நாம் பலவாறு செய்யலாம். அதுவும் உங்கள் வீட்டில் பிரட் இருந்தால், அந்த பிரட் கொண்டு பிரட் பிட்சா செய்யலாம். இந்த பிரட் பிட்சா மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஒரு நல்ல ஸ்நாக்ஸாக இருக்கும்.
உங்களுக்கு பிரட் பிட்சாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் பிட்சா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 4 துண்டுகள்
* தக்காளி கெட்சப் - தேவையான அளவு
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை அல்லது மஞ்சள் நிற குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* மொசரெல்லா சீஸ் - தேவையான அளவு (துருவியது)
* ஆரிகனோ - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகு - சுவைக்கேற்ப
* ஆலிவ் ஆயில் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், ஆரிகனோ, உப்பு, மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பிரட் துண்டுகளை எடுத்து, அவற்றை முதலில் டோஸ்டர் அல்லது தோசைக் கல்லில் போட்டு டோஸ்ட் செய்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளை எடுத்து அவற்றின் மேல் சிறிது தக்காளி கெட்சப்பை தடவ வேண்டும்.
* பிறகு அதன் மேல் ஒரு ஸ்பூன் காய்கறி கலவையை பரப்ப வேண்டும். அதன் பின் அவற்றின் மேல் சிறிது துருவிய சீஸை பரப்ப வேண்டும்.
* பின்னர் அந்த பிரட் துண்டை சூடான தோசைக்கல்லின் மீது வைத்து, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 2 நிமிடம் சீஸை உருக வைத்து எடுத்தால், சுவையான பிரட் பிட்சா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications