Latest Updates
-
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பிரட் முட்டை மசாலா
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது காரசாரமாக ஸ்நாக்ஸ் சாப்பிட ஆசையா? உங்கள் வீட்டில் முட்டை மற்றும் பிரட் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையான பிரட் முட்டை மசாலா செய்யுங்கள்.
மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது காரசாரமாக ஸ்நாக்ஸ் சாப்பிட ஆசையா? உங்கள் வீட்டில் முட்டை மற்றும் பிரட் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையான பிரட் முட்டை மசாலா செய்யுங்கள். இந்த பிரட் முட்டை மசாலா குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு பிரட் முட்டை மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரட் முட்டை மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரட் - 4 துண்டுகள்
* முட்டை - 2
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பிரட் துண்டுகளை எடுத்துக் கொண்டு, அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் முட்டை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, அடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளி மற்றும் குடைமிளகாயை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட்டு, மசாலாவை கடாயின் ஒரு பக்கமாக ஒதுக்கி வைக்க வேண்டும்.
* பின் அதில் முட்டையை ஊற்றி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து, அனைத்தையும் நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் பிரட் துண்டுகளை சேர்த்து மசாலாவுடன் பிரட் துண்டுகள் நன்கு சேர்ந்த பின், மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பிரட் முட்டை மசாலா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications









