Latest Updates
-
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்..
பிராமின் ஸ்டைல் வெஜிடேபிள் குருமா செய்வது எப்படி?
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான ஸ்டைலில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பிராமின் ஸ்டைல் வெஜிடேபிள் குருமா ரெசிபியை செய்யுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான ஸ்டைலில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பிராமின் ஸ்டைல் வெஜிடேபிள் குருமா ரெசிபியை செய்யுங்கள். இந்த ஸ்டைல் குருமாவிற்கு வெங்காயம், பூண்டு என்று எதுவுமே தேவையில்லை, காய்கறிகள் இருந்தாலே போதுமானது. முக்கியமாக இந்த ஸ்டைல் குருமா செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த ரெசிபி செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

உங்களுக்கு பிராமின் ஸ்டைல் வெஜிடேபிள் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிராமின் ஸ்டைல் வெஜிடேபிள் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கேரட் - 2 (பொடியாக நறுக்கியது)
* பீன்ஸ் - 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
* பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
* கடுகு - 1 டீஸ்பூன்
* கிராம்பு - 2
* பட்டை - 1 துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* கருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1
* இஞ்சி - 1 இன்ச்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* புளி - ஒரு துண்டு
செய்முறை:
* முதலில் காய்கறிகளை நீரில் கழுவி, அவற்றை வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, கொத்தமல்லி, கருஞ்சீரகம், சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, மஞ்சள் தூள், புளி ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* காய்கறிகளானது பாதி வெந்ததும், அதில் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து 2 நிமிடம் கிளறி, நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான பிராமின் ஸ்டைல் வெஜிடேபிள் குருமா தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications