ஒருடைம் பாகற்காயை இப்படி செய்யுங்க.. கசப்பும் தெரியாது.. குழந்தைகளும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...

Posted By:

Bittergourd Fry Recipe In Tamil: உங்கள் வீட்டில் பாகற்காய் உள்ளதா? ஆனால் வீட்டில் உள்ளோர் யாரும் பாகற்காயை சாப்பிடமாட்டார்களா? பாகற்காய் என்றாலே தலைதெறிக்க ஓடுகிறார்களா? அப்படியென்றால் இனிமேல் கவலைப்படாதீர்கள். பாகற்காயின் கசப்புத்தன்மை தெரியாத வகையில் ஒரு அருமையான ஸ்நாக்ஸ் அல்லது சைடு டிஷ் செய்யுங்கள்.

இப்படி பாகற்காயை செய்யும் போது, வேண்டாம் என்று யாரும் கூறமாட்டார்கள். அது தான் பாகற்காய் ப்ரை அல்லது பாகற்காய் குர்குரே. இந்த பாகற்காய் ப்ரை நன்கு மொறுமொறுவென்று இருக்கும் மற்றும் குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும். முக்கியமாக இதில் கசப்பு தெரியாது.

Bittergourd Fry How To Make a Pavakkai Kurkure Recipe

உங்களுக்கு கசப்பில்லாத பாகற்காய் ப்ரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாகற்காய் குர்குரே ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பாகற்காய் - 400 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சோம்புத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* பச்சரிசி மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* ரவை - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

* முதலில் பாகற்காயை நீரில் கழுவிவிட்டு, அதனுள் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, சற்று நீளமான மெல்லிய துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த பாகற்காயுடன் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கைகளால் நன்கு பிரட்டி, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி ஊற வைக்கும் போது, பாகற்காயில் இருந்து நீர் விட்டு வரும். இந்த நீரில் தான் கசப்புத்தன்மை அதிகம் இருக்கும்.
* 1/2 மணிநேரம் கழித்து, பாகற்காயில் உள்ள அதிகப்படியான நீரை கைகளால் பிழிந்து நீக்கிவிட வேண்டும்.
* பின்பு அந்த பாகற்காயுடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சோம்புத் தூள், கரம் மசாலா, பச்சரிசி மாவு, ரவை ஆகியவற்றை சேர்த்து கைகளால் நன்கு ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.
* பின் அதை 15 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் வைத்து, பிரட்டி வைத்துள்ள பாகற்காய் துண்டுகளை சேர்த்து, உடனே கரண்டியால் கிளறி விடாமல், 1 நிமிடம் கழித்து கரண்டியால் கிளறி விட்டு, நன்கு மொறுமொறுவென்று ப்ரை செய்து எடுத்தால், சுவையான பாகற்காய் குர்குரே அல்லது பாகற்காய் ப்ரை தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, November 18, 2024, 15:20 [IST]
Desktop Bottom Promotion