Latest Updates
-
கையேந்தி பவன் வடகறி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. இட்லிக்கு அள்ளும்.. -
நவம்பர் 09, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணும் - இல்லனா கஷ்டப்பட வேண்டியிருக்கும் -
Diwali 2026: பட்டாசுப் பொறிகள் கண்களில் பட்டால் இந்தத் தவறுகளைச் செய்யாதீர்கள்! கண் மருத்துவர் எச்சரிக்கை! -
Diwali 2026: தீபாவளி பட்டாசு தீப்பொறி சருமத்தில் பட்டால் என்ன செய்வது? மருத்துவர் கூறும் முதலுதவி வழிகள்! -
குண்டூர் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
தீபாவளி ஸ்பெஷல் பாய்வீட்டு மட்டன் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 08, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிசயங்கள் நடக்கும் நாளாக இருக்குமாம் -
சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைந்திருப்பதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுதாம் - உங்க ராசி என்ன -
தீபாவளிக்கு இந்த பொள்ளாச்சி ஸ்டைல் சிக்கன் பிரியாணியை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
Skin Care: தக்காளி எப்படி உங்கள் சருமத்தை கண்ணாடி போல ஜொலிக்க வைக்கும் தெரியுமா?
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும்
Bengali Veg Kichdi Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் இட்லி அல்லது தோசைதான் பிரதானமான காலை உணவாக இருக்கும். தினமும் ஒரே மாதிரியான காலை உணவு சாப்பிட்டு போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உப்புமா என்றாலே பயந்து ஓடுவார்களா? அப்படியென்றால் ஒருமுறை கிச்சடியை செய்து பாருங்கள். அதுவும் சாதாரண கிச்சடியாக இல்லாமல் பெங்காலி ஸ்டைலில் முயற்சி செய்து பாருங்கள்.

பொதுவாக கிச்சடி பெரும்பாலான நபர்கள் அடிக்கடி முயற்சிக்காத உணவாக இருக்கும். ஆனால் உண்மையில் கிச்சடி ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவாகும். பொதுவாக ரவையை வைத்துதான் கிச்சடி செய்வார்கள், ஆனால் இன்று நாம் பார்க்கப்போவது பெங்காலி ஸ்டைலில் பாஸ்மதி அரிசி மற்றும் பாசிப்பருப்பை வைத்து செய்யப்படும் கிச்சடி ரெசிபியைத்தான். இந்த கிச்சடி செய்வதற்கு மிகவும் எளிதானது மற்றும் அதேசமயம் மிகவும் சுவையானதும் கூட. அனைத்திற்கும் மேலாக இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட.
உங்களுக்கு சுவையான பெங்காலி ஸ்டைல் கிச்சடியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெங்காலி கிச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் பாஸ்மதி அரிசி
- 1 கப் பாசிப்பருப்பு
- 3 ஸ்பூன் நெய் அல்லது 2.5 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய்
- 1 இன்ச் பட்டை
- 2 பச்சை ஏலக்காய்
- 3 கிராம்பு
- 1 பிரிஞ்சி இலை
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 இன்ச் துருவிய இஞ்சி
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ ஸ்பூன் மிளகாய் தூள்
- ஒரு சிட்டிகை பெருங்காயத்தூள்
- 2 நறுக்கிய தக்காளி
- 1 பச்சை மிளகாய், நறுக்கியது
- 2 சிறிய உருளைக்கிழங்கு,
- ½ கப் காலிஃபிளவர்
- ½ கப் பட்டாணி
- ½ கப் கேரட்
- ½ ஸ்பூன் சர்க்கரை
- தேவையான அளவு உப்பு
- 5 கப் தண்ணீர்
செய்முறை:
- அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். அரிசி ஊறியதும் தண்ணீரை வடிகட்டி அரிசியை தனியாக வைக்கவும்.
- ஒரு வாணலியில் பாசிப்பருப்பைச் சேர்த்து, அது லேசான பொன்னிறமாகவும் நல்ல நறுமணம் வீசும் வகையிலும் வரும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
- பருப்பு நன்கு வறுபட்டதும், பருப்பை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, ஆறவைக்கவும்.
- பருப்பு ஆறியதும், அதை நன்றாக கழுவி வடிகட்டி விட்டு தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
- நெய் சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை மற்றும் சீரகம் ஆகிய முழு மசாலாப் பொருட்களைச் சேர்த்து, மிதமான தீயில் வாசனை வரும் வரை வதக்கவும்.
- சீரகம் பொரிந்ததும் துருவிய இஞ்சியைச் சேர்த்து, 5 முதல் 6 வினாடிகள் வரை அல்லது இஞ்சியின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, குறைந்த தீயில் சில வினாடிகள் வதக்கவும்.
- அதன்பின் நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை அடிக்கடி கிளறி வதக்கவும்.
- பின்னர் கேரட், உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் மற்றும் பட்டாணி ஆகியவற்றை சேர்க்கவும்.
- நன்றாகக் கிளறி மிதமான தீயில் ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் வறுத்த பாசிப்பருப்பைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
- அதன்பின் ஊறவைத்த அரிசியைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.
- 5 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு சர்க்கரை மற்றும் உப்பு சேர்க்கவும்.
- நன்றாகக் கிளறிய பிறகு, மிதமான தீயில் வைத்து 4 முதல் 5 விசில் வரும் வரை குக்கரில் வேகவைக்கவும்.
- குக்கரில் உள்ள அழுத்தம் தானாக வெளியேறிய பிறகு மட்டும் அதன் மூடியைத் திறக்கவும்.
- அவ்வளவுதான் சூப்பரான பெங்காலி கிச்சடி ரெடி!



Click it and Unblock the Notifications
