Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
பெங்காலி லுச்சி
வீட்டில் கோதுமை மாவு இல்லையா? மைதா மாவு உள்ளதா? அப்படியெனில் அந்த மைதாவைக் கொண்டு பெங்காலி லுச்சி செய்யுங்கள். லுச்சி என்பதும் பூரியைப் போன்றது தான்.
இன்று இரவு உங்கள் வீட்டில் பூரி செய்து சாப்பிட ஆசைப்படுகிறீர்களா? ஆனால் வீட்டில் கோதுமை மாவு இல்லையா? மைதா மாவு உள்ளதா? அப்படியெனில் அந்த மைதாவைக் கொண்டு பெங்காலி லுச்சி செய்யுங்கள். லுச்சி என்பதும் பூரியைப் போன்றது தான். ஆனால் லுச்சி என்பது வெள்ளை நிறத்தில் மைதாவில் நெய் அதிகம் சேர்த்து பிசைந்து செய்யப்படும் பூரி ஆகும். இந்த லுச்சி மிகவும் சுவையாக இருக்கும். இந்த லுச்சியை தால், சிக்கன் கிரேவி, உருளைக்கிழங்கு கிரேவி என்று அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு பெங்காலி லுச்சி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெங்காலி லுச்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மைதா - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்/ எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் நெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரைத் தெளித்து, கையால் நன்கு பிசைய வேண்டும்.
* பின்பு மெதுவாக நீரை ஊற்றி நன்கு மென்மையாகும் வரை பிசைய வேண்டும். மாவானது கையில் ஒட்டக்கூடாது.
* பிறகு பிசைந்த மாவை மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அந்த உருண்டைகளை எண்ணெய் பயன்படுத்தி பூரி அளவில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக சேர்த்து முன்னும் பின்னும் வெள்ளை நிறம் மாறாமல் வேக வைத்து எடுத்தால், பெங்காலி லுச்சி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications

