Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
பெங்காலி ஸ்டைல் சிக்கன் குருமா ரெசிபி... இப்டி செஞ்சு பாருங்க..சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்!
Bengali Chicken Curry Recipe in Tamil: சண்டே வந்தாலே சிக்கன் சாப்பிட வேண்டுமென்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கப் போகிறீர்களா? வழக்கமான சிக்கன் செய்யாமல் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான சிக்கன் குருமா செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் பெங்காலி ஸ்டைல் சிக்கன் குருமாவை செய்யுங்கள்.
இந்த பெங்காலி சிக்கன் குருமா சாதம், பிரியாணி மட்டுமின்றி தோசை, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். சிக்கனுடன் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யப்படுவதால், இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு பெங்காலி ஸ்டைல் சிக்கன் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெங்காலி சிக்கன் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 500 கிராம் சிக்கன்
- 3 உருளைக்கிழங்கு
- 3 வெங்காயம்
- 2 தக்காளி
- 1 பிரியாணி இலை
- 1 வர மிளகாய் (பாதியாக உடைத்தது)
- ½ ஸ்பூன் மிளகு
- 4 பச்சை ஏலக்காய் (தோராயமாக இடித்தது)
- 4 கிராம்பு
- 3 இலவங்கப்பட்டை
- தேவையான அளவு உப்பு
- ½ ஸ்பூன் சர்க்கரை
- எண்ணெய் தேவையான அளவு
- 5 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
- ½ ஸ்பூன் - மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தூள்
- 1½ கப் வெந்நீர்
- 1 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் (தோராயமாக நறுக்கியது)
- ¼ ஸ்பூன் கரம் மசாலா தூள்
செய்முறை:
- ஒரு கடாயில் 4-5 டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். மிதமான தீயில் நறுக்கிய உருளைக்கிழங்குகளைப் பொன்னிறமாகும் வரை வறுத்து, எடுத்துத் தனியாக வைக்கவும்.
- மீதமுள்ள எண்ணெயில் பிரியாணி இலை, வர மிளகாய், ஏலக்காய், மிளகு, கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்துத் தாளிக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அதன்பின் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- அதன்பின் கொத்தமல்லித் தூள், காஷ்மீரி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் நறுக்கிய தக்காளியைச் சேர்க்கவும். நன்றாகக் கலந்து, கரண்டியால் தக்காளியை மசிக்கவும். மசாலா எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் சமைக்கவும்.
- பின்னர் கழுவி வைத்த சிக்கன், வறுத்த உருளைக்கிழங்கு மற்றும் பச்சை மிளகாயைச் சேர்க்கவும். மூடி போட்டு, குறைந்த தீயில் 15 நிமிடங்கள் வேக வைக்கவும், இடையிடையே கிளறி விடவும்.
- இப்போது சூடான நீரைச் சேர்த்து, கலந்து, மூடி போட்டு, சிக்கன் முழுமையாக வேகும் வரை குறைந்த தீயில் சமைக்கவும். சிக்கன் பாதி வெந்ததும் இடையில் உப்பு சேர்க்கவும்.
- கடைசியில் சர்க்கரை மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து, கலந்து, மூடியைத் திறந்து வைத்தே மேலும் 2-3 நிமிடங்கள் சமைக்கவும்.
- இறுதியாக கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும். அவ்வளவுதான் சுவையான பெங்காலி சிக்கன் குருமா ரெடி.
- இதை சூடான சாதத்துடன் பரிமாறி மகிழ்ச்சியாக சாப்பிடவும்.



Click it and Unblock the Notifications











