Latest Updates
-
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு பணமும், புகழும் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களை செல்வந்தராக்கப் போகுது.! உங்க ராசி என்ன? -
பாபா வங்காவின் கணிப்பு படி செப்டம்பர் மாதத்தில் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
பீட்ரூட்டை இந்த ஸ்டைலில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Beetroot Poriyal Recipe In Tamil: பொதுவாக பீட்ரூட்டை பொரியல் தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர், குறிப்பாக பிள்ளைகள் பீட்ரூட் சாப்பிடமாட்டார்களா? அவர்களை பீட்ரூட் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் அவர்களுக்கு வழக்கமாக செய்வது போன்று பீட்ரூட் பொரியல் செய்து கொடுக்காமல், சற்று வித்தியாசமான ஸ்டைலில் பொரியல் செய்து கொடுங்கள். இப்படி பீட்ரூட் பொரியல் செய்யும் போது சுவை வித்தியாசமாகவும், அட்டகாசமாகவும் இருக்கும். முக்கியமாக இப்படி செய்தால் பிடிக்காதவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பீட்ரூட் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பீட்ரூட் - 1/2 கிலோ (பொடியாக நறுக்கியது)
அரைப்பதற்கு..
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 4-6
* வெல்லம் - சிறிய துண்டு
* காஷ்மீரி வரமிளகாய் - 4-5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* அரைத்த விழுது
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* வேக வைத்த பீட்ரூட்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் நறுக்கிய பீட்ரூட்டை எடுத்துக் கொண்டு, சிறிது
நீரை ஊற்றி, குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து பீட்ரூட்டை கிளறி தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு, கடுகு, பூண்டு, வெல்லம்,
காஷ்மீரி வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை
நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
கறிவேப்பிலையை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் வரும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் புளிச்சாற்றினை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த பீட்ரூட்டை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி நன்கு வதக்கி இறக்கி, கொத்தமல்லியைத் தூவி கிளறி பரிமாறினால்,
சுவையான பீட்ரூட் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications