Just In
- 5 min ago
ராசிப்படி கிருஷ்ணருக்கு எந்த பொருளை படைத்தால், அவரின் முழு அருள் கிடைக்கும் தெரியுமா?
- 25 min ago
உங்கள் மூட்டுகளில் இந்த பிரச்சினை இருக்கா? அப்ப உங்க இதயம் ஆபத்தில் இருக்குனு அர்த்தம்... ஜாக்கிரதை!
- 1 hr ago
இந்த 5 ராசிக்காரங்க எந்த உறவிலும் கடைசி வர உறுதியா இருக்க மாட்டாங்களாம்... ஏன் தெரியுமா?
- 2 hrs ago
காவல்துறையினர் ஏன் காக்கி நிறத்தில் மட்டும் சீருடை அணிகிறார்கள் தெரியுமா? சுவாரஸ்யமான வரலாறு!
Don't Miss
- Sports
இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை எதற்காக தடை.. பல முறை வந்த எச்சரிக்கை.. முழு விவரம் இதோ!
- Finance
8 நிமிடங்களில் தேவையான சேவை.. கொரோனாவினால் தோன்றிய புதிய வணிகம்.. அசத்தும் கேரளா மாணவன்!
- Technology
அடேங்கப்பா.. ஹை-குவாலிட்டி டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும் Motorola எட்ஜ் 30 ஃபியூஷன்.!
- Travel
உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தில் பறந்த இந்திய தேசக் கொடி!
- News
6 வயசுதான்.. கதறித் துடித்த சிறுமி! வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி நடிகர் கைது! அதிர்ந்த சென்னை!
- Movies
ராக்கெட்டா போகும்னு பார்த்தா.. எல்லாமே புஸ்வாணமா ஆகிடுச்சே.. கால் அழகியை கலாய்த்த காம்பெட்டிட்டர்!
- Automobiles
ஹூண்டாய் டுஸான் காரை வாங்கலாமா? வேண்டாமா? இந்த 5 விஷயத்தைக் கட்டாயம் படிச்சு பாருங்க...
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
ஈஸியான... பீட்ரூட் அல்வா
உங்கள் வீட்டில் பீட்ரூட் அதிகமாக உள்ளதா? உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் ஸ்வீட் சாப்பிட கேட்டால், வீட்டில் உள்ள பீட்ரூட்டைக் கொண்டு ஒரு சுவையான பீட்ரூட் அல்வா செய்யுங்கள். இந்த பீட்ரூட் அல்வா செய்வது மிகவும் ஈஸி. அதோடு இதை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்து கொடுத்தால், அவர்களை அசத்திவிடலாம்.
உங்களுக்கு பீட்ரூட் அல்வா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பீட்ரூட் - 2 (தோல் நீக்கி, துருவியது)
* நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
* பால் - 1 கப்
* சர்க்கரை - 1/2 கப் முதல் 3/4 ப்
* முந்திரி - 1 கையளவு
* உலர் திராட்சை - 1 கையளவு
* ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், பீட்ரூட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் பால் ஊற்றி குக்கரை மூடி 2 விசில் விட்டு, தீயைக் குறைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் உள்ள நெய்யில் குக்கரில் உள்ள பீட்ரூட்டை பாலுடன் ஊற்றி, ஏலக்காய் பொடி சேர்த்து பால் வற்றும் வரை நன்கு கிளற வேண்டும்.
* பால் வற்றியதும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளற வேண்டும். அப்படி கிளறும் போது, பீட்ரூட் வாணலியில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வரும்.
* இந்நிலையில் மீதமுள்ள நெய் ஊற்றி நன்கு கிளறி, வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளறி இறக்கினால், பீட்ரூட் அல்வா தயார்.
Image Courtesy: yummytummyaarthi