Latest Updates
-
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும் கலர்புல்லான பீட்ரூட் சட்னி ரெசிபி... எப்படி செய்யுறதுனு தெரிஞ்சிக்கோங்க...!
தற்போது வீடுகளில் இருக்கும் குளிர்சாதனப் பெட்டியின் புண்ணியத்தில் பெரும்பாலான வீடுகளில் தினசரி இட்லி, தோசை, மற்றும் பணியாரம் போன்ற உணவு வகைகள் கிடைப்பது எளிதான ஒன்றாகிவிட்டது. இது இரவு உணவிற்கு என்ன சமைப்பது என்கிற ஒரு பிரச்சனைக்கு தீர்வாக அமைந்தாலும், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வது என்கிற இன்னொரு பூதத்தை கிளப்பும். என்ன தான் விதம் விதமாக சமைத்தாலும் சில நாட்களில் அலுப்பு தட்டிவிடும்.
சில நேரத்தில் இப்படி தினசரி சாப்பிடுவது ஆரோக்கியமானதா என்கிற சந்தேகமும் ஏற்படும். சுவையை மாற்ற விரும்பினாலும் என்ன செய்ய வேண்டும் என்கிற யோசனை இருக்காது. ஆரோக்கியத்தோடும் சுவையோடும் ஏன் நல்ல நிறத்தோடும் இருக்கும் பீட்ரூட் சட்னி எப்படி செய்வது என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:
- பீட்ரூட் - 2
- பச்சை மிளகாய் - 3
- சீரகம் - ¼
- புதினா - 1 கைப்பிடி
- கொத்தமல்லி இலை - 1 ½ கைப்பிடி
- எலுமிச்சை - ½ மூடி
- தேங்காய் - ½ மூடி
- பூண்டு - 2 பல்
- இஞ்சி - 1 இன்ச் அளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - ½ டீ ஸ்பூன்
- உளுந்தம்பருப்பு - ½ டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - சிறிதளவு
- பெருங்காயம் - சிறிதளவு
செய்முறை:
- பீட்ரூட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவி
எடுத்து ஈரத்தை உலரவிடவும்.
- பூண்டு மற்றும் இஞ்சியின் தோல் நீக்கி வைக்கவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து வைத்து கொள்ளவும்.
- எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து விதைகளை நீக்கி
வைக்கவும்.
- இப்போது மிக்ஸி ஜாரில் நறுக்கிய பீட்ரூட், புதினா, கொத்தமல்லி
இலைகள், பூண்டு, இஞ்சி, மற்றும் தேங்காய் சேர்க்கவும்.
- அதனுடன் பச்சை மிளகாயை சிறிய துண்டுகளாக உடைத்து சேர்க்கவும்.
- பின் அதில் சீரகம் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
- கடைசியாக அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து
கொள்ளவும்.
- இப்போது வாணலியை அடுப்பில் வைத்து சூடானது எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- பின் அதில் பச்சை கருவேப்பிலை சேர்க்கவும்.
- அதனுடன் உளுந்து மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை
வறுக்கவும்.
- கடைசியாக பெருங்காயம் சேர்த்து, சட்டினி உடன் சேர்த்தால் சுவையான
பீட்ரூட் சட்னி ரெடி!
- இது இட்லி, தோசை, சாதம் என அனைத்துடனும் அட்டகாசமான சுவையை
கொடுக்கும்.
- பீட்ரூட் செரிமான கோளாறுகளை சரி செய்யும் பண்புகளை
கொண்டிருக்கிறது.
- இதில் இருக்கும் பீட்ரூட் எலுமிச்சை சாறு கலவை இரத்த
சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications