Latest Updates
-
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும்
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
Chef Deena's Style Beans Paruppu Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பீன்ஸ் என்றாலே பிடிக்காதா? பீன்ஸ் செய்தால் ஓடுவார்களா? அப்படிப்பட்டவர்களை பீன்ஸ் சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் வழக்கமாக செய்வது போன்று பீன்ஸை பொரியல் செய்யாமல், செஃப் தீனா ஸ்டைலில் பீன்ஸ் பருப்பு பொரியலை செய்து கொடுங்கள். இந்த பக்குவத்தில் பீன்ஸை பொரியல் செய்து கொடுக்கும் போது, பிடிக்காதவர்கள் கூட கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பீன்ஸ் - 1/4 கிலோ
* கடலைப் பருப்பு - 100 கிராம் (3 மணிநேரம் ஊற வைத்தது)
* துவரம் பருப்பு - 50 கிராம் (3 மணிநேரம் ஊற வைத்தது)
* வரமிளகாய் - 15
* பூண்டு - 15 பல்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் ஊற வைத்த கடலைப்பருப்பு மற்றும் துவரம்
பருப்பை கழுவி சேர்த்து, அத்துடன் 10 வரமிளகாய், 3/4 டேபிள் ஸ்பூன்
சோம்பு, 1 கொத்து கறிவேப்பிலை, 10 பல் பூண்டு சேர்த்து, நன்கு வடை
பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த பருப்பை எடுத்துக் கொண்டு,
அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து விட
வேண்டும்.
* பிறகு இட்லி தட்டில் இந்த அரைத்த பருப்பை உதிர்த்து எடுத்துக்
கொண்டு, இட்லி பாத்திரத்தினுள் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி,
குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில்
சிறிது உப்பு சேர்த்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில்
நறுக்கிய பீன்ஸை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பீன்ஸ் வெந்ததும், அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து குளிர வைத்த பருப்பை கைகளால் உதிர்த்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், மீதமுள்ள சோம்பு, இடித்த 5
பல் பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், வரமிளகாய், நறுக்கிய வெங்காயம்,
கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த பீன்ஸ் மற்றும் பருப்பை சேர்த்து,
கொத்தமல்லியைத் தூவி நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் சுவைக்கேற்ப சிறிது உப்பு தூவி நன்கு 3 நிமிடம் கிளறி
இறக்கினால், சுவையான பீன்ஸ் பருப்பு உசிலி தயார்.



Click it and Unblock the Notifications
