Latest Updates
-
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்!
செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல்
நீங்கள் மதிய வேளையில் மிகவும் எளிமையான பொரியல் ஏதேனும் செய்ய விரும்பினால், செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியலை செய்யலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
செட்டிநாடு ரெசிபிக்களில் பீன்ஸ் முட்டை பொரியல் மிகவும் பிரபலமானதும் சுவையானதும் கூட. நீங்கள் மதிய வேளையில் மிகவும் எளிமையான பொரியல் ஏதேனும் செய்ய விரும்பினால், செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியலை செய்யலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

பீன்ஸில் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஒருவர் அடிக்கடி உணவில் பீன்ஸ் சேர்த்து வந்தால், பல்வேறு நன்மைகளைப் பெறலாம். உங்கள் வீட்டில் உள்ளோர் பீன்ஸ் சாப்பிட மறுத்தால், அவர்களுக்கு அதை முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுங்கள்.
MOST READ: ருசியான... முட்டை ஆம்லெட் குழம்பு
உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அதன் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 6
* பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரக விதைகள் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* பின்பு அதில் பீன்ஸ் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு தூவி நன்கு வேகும் வரை வதக்கவும். அதற்குள் மிளு மற்றும் சீரகத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.
* பிறகு அரைத்த பொடியை சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வதக்கவும்.
* அடுத்து, அதில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு தூவி குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி விடவும்.
* முட்டை நன்கு வெந்ததும், அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications