Latest Updates
-
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா?
ருசியான... முட்டை ஆம்லெட் குழம்பு
சாதத்திற்கு ஏற்றவாறு முட்டையைக் கொண்டு சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் முட்டை ஆம்லெட் குழம்பு செய்யுங்கள். இது சாதத்திற்கு அட்டகாசமாக இருப்பதோடு, செய்வதற்கும் மிகவும் எளிதாக இருக்கும்.
உங்களுக்கு சிக்கன், மட்டன் செய்து அலுத்துவிட்டதா? சாதத்திற்கு ஏற்றவாறு முட்டையைக் கொண்டு சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் முட்டை ஆம்லெட் குழம்பு செய்யுங்கள். இது சாதத்திற்கு அட்டகாசமாக இருப்பதோடு, செய்வதற்கும் மிகவும் எளிதாக இருக்கும். அதோடு இந்த குழம்பை நீங்கள் சப்பாத்தி, தோசையுடனும் சாப்பிடலாம். உங்களுக்கு முட்டை ஆம்லெட் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியானால் கீழே முட்டை ஆம்லெட் குழம்பின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 4
* உப்பு - தேவையான அளவு
* மிளகுத் தூள் - தேவையான அளவு
குழம்பிற்கு...
* வெங்காயம் - 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* காஷ்மீரி மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
* சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
* மல்லித் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - தேவையான அளவு
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - ஒரு டீஸ்பூன்
* பட்டை - ஒரு துண்டு
* ஏலக்காய் - 3
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, அதில் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி ஒரு நிமிடம் கழித்து, அப்படியே ரோல் போன்று சுருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை சிறு துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பிறகு ஜாரில் வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், சீரகத்தை சேர்த்து தாளிக்கவும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து, உப்பு மற்றும் சர்க்கரை தூவி, பச்சை வாசனை போக வேக வைக்கவும்.
* பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, எண்ணெய் பிரிய கொதிக்க வைக்கவும்.
* இறுதியில் அதில் ஆம்லெட் துண்டுகளைப் போட்டு கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான முட்டை ஆட்லெட் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications