Latest Updates
-
World Alzheimer's Day 2026: அல்சைமர் நோய் பற்றிய 10 பொதுவான கேள்விகளுக்கு நரம்பியல் நிபுணரின் பதில்கள்! -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா?
தேங்காய் சட்னியை ஒருடைம் பெங்களூரு ஸ்டைலில் அரைச்சு பாருங்க.. சுவை லேற லெவல்-ல இருக்கும்...
Bangalore Style Coconut Chutney In Tamil: உங்கள் வீட்டில் பெரும்பாலும் காலையில் இட்லி, தோசை தான் செய்வீர்களா? அந்த இட்லி, தோசைக்கு எப்போதும் தேங்காய் சட்னியைத் தான் அதிகம் செய்வீர்களா? இப்படி ஒரே சுவையில் தேங்காய் சட்னி செய்து போரடித்துவிட்டதா?
தேங்காய் சட்னியையே வித்தியாசமான சுவையில் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியென்றால் அடுத்தமுறை தேங்காய் சட்னியை செய்வதாக இருந்தால், பெங்களூர் ஸ்டைலில் தேங்காய் சட்னியை செய்யுங்கள். பெங்களூரு ஹோட்டல்களில் கொடுக்கப்படும் தேங்காள் சட்னியின் சுவையே தனி தான்.

இந்த தேங்காய் சட்னியை உங்கள் வீட்டில் செய்ய விரும்புகிறீர்களா? இந்த பெங்களூரு தேங்காய் சட்னி, இட்லி ,தோசையுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். அதோடு இது டக்கென்று செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு பெங்களூரு தேங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள் ளவேண்டுமா? கீழே பெங்களூரு தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்து கொட்ட்ட
தேவையான பொருட்கள்:
* தேங்காய் - 1 கப்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 2
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் 1 கப் நறுக்கிய தேங்காயை மிக்சர் ஜாரில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் பொட்டுக்கடலை, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி சற்று கொரகொரவென்று அரைத்து, ஒரு
கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பெங்களூரு ஸ்டைல்
தேங்காய் சட்னி தயார்.
Image Courtesy: Subbus Kitchen



Click it and Unblock the Notifications
