Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
பெங்களூர் ஸ்டைல் கத்தரிக்காய் கிரேவி ரெசிபி... டிபன், சாதம் ரெண்டுக்குமே சூப்பரா இருக்கும்... செஞ்சு பாருங்க!
Bangalore Style Brinjal Gravy Recipe in Tamil: தினமும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான இல்லத்தரசிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கலாகும். வழக்கமான சாம்பார், பொரியல் போன்றவை நாளடைவில் சாப்பிடுபவர்களுக்கு மட்டுமல்ல சமைப்பவர்களுக்கும் நாளடைவில் சலிப்பை ஏற்படுத்தும். அதுபோன்ற சூழலில் பக்கத்து மாநில உணவுகளை முயற்சிப்பது நல்லது.
கத்தரிக்காய் என்பது கிட்டதட்ட அனைத்து வீடுகளிலும் சமைக்கும் ஒரு காய்கறியாகும். கத்தரிக்காயை பொதுவாக குழம்பு அல்லது பொரியல் போன்ற வடிவத்தில் சமைத்து சாப்பிடுவோம். ஆனால் பெங்களூரில் கத்தரிக்காயை ஒரு வித்தியாசமான கிரேவியாக செய்வார்கள். இந்த கிரேவியானது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சுவையாக இருக்கும். இந்த சுவையான பெங்களூர் கத்தரிக்காய் கிரேவியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 4 நறுக்கிய பெரிய கத்திரிக்காய்
- 2 நறுக்கிய தக்காளி - 4
- 2 நறுக்கிய வெங்காயம்
- 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- நெல்லிக்காய் அளவு புளி(சூடான நீரில் ஊற வைத்தது)
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் மிளகு
- அரை ஸ்பூன் நாட்டுச் சர்க்கரை
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 ஸ்பூன் மிளகாய் தூள்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- உப்பு தேவைக்கேற்ப
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை:
- முதலில் புளியை சுடுநீரில் 20 நிமிடம் ஊற வைத்து, நன்கு பிசைந்து 1/2 கப் சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு வெங்காயத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதே மிக்சர் ஜாரில் தக்காளியைப் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது ஒரு கடாயையை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய கத்திரிக்காயை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். கத்திரிக்காயின் தோல் ப்ரவுன் நிறத்தில் மாறியதும், அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, மிளகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்பு அதில் வெங்காய பேஸ்ட் சேர்த்து வதக்கவும், பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சில நிமிடங்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
- அதன்பின்னர் அரைத்த தக்காளியை ஊற்ற வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- மசாலாக்கள் வதங்கியதும் புளிச்சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 15 நிமிடம் குறைவான தீயில் நன்கு வேக வைக்க வேண்டும்.
- பிறகு மூடியைத் திறந்து, அதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, வதக்கி வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து, 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, கத்திரிக்காயை நன்கு வேக வைக்க வேண்டும்.
- கத்திரிக்காய் நன்கு வெந்ததும் இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பெங்களூரு ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications
