Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
சத்தான வாழைத்தண்டு சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும்
Banana Stem Chutney Recipe in Tamil: பெரும்பாலான இந்திய வீடுகளில் பிரதான காலை அல்லது இரவு உணவாக இருப்பது இட்லி, தோசைதான். இவற்றை சமைப்பது என்பது என்னவோ எளிதான வேலைதான் ஆனால் அவற்றுக்கு சரியான சைடிஷ் செய்வதுதான் இல்லதரிசிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும். அந்த நிலையில் தினமும் புதுப்புது சட்னிகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

நாம் அனைவரும் வாழைத்தண்டை வாழ்க்கையில் ஒரு முறையாவது சாப்பிட்டிருப்போம். ஆனால் நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அதன் துவர்ப்பு சுவை பிடிக்காது. வாழைத்தண்டில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் அளவிட முடியாதவை. குறிப்பாக நம்முடைய சிறுநீரக ஆரோக்கியத்திற்கு வாழைத்தண்டு பல நன்மைகளை வழங்குகிறது.
வாழைத்தண்டின் சுவை பிடிக்காதவர்களுக்கு அதனை வேறு வழிகளில் சமைத்துக் கொடுப்பது புத்திசாலித்தனமான வழியாகும். எனவே வாழைத்தண்டை சட்னியாக அரைத்துக் கொடுப்பது ஆரோக்கியத்தையும் கொடுக்கும், இட்லி, தோசை போன்றவற்றுக்கு சுவையான சைடிஷாகவும் இருக்கும். இந்த பதிவில் வாழைத்தண்டை வைத்து எப்படி சுவையான சட்னி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- வாழைத்தண்டு - 1 கப்( வாழைத்தண்டை நார் இல்லாமல் சுத்தம் செய்து
வைத்துக்கொள்ளுங்கள்)
- உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
- மல்லி விதைகள் - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - ஒரு கையளவு
- வரமிளகாய் - 5
- உப்பை - தேவையான அளவு
- வெல்லம் - 1 ஸ்பூன்
- தேங்காய் - அரை கப்
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- புளி தண்ணீர் - 2
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- 1/2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்
- பெருங்காயம் - 1 சிட்டிகை
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
- உடைத்த வர மிளகாய் - 1
செய்முறை:
- நார் எடுத்து வைத்த வாழைத்தண்டை 5 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். பின்னர் அடுப்பை அனைத்து குளிர வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் 1/4 டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் வர மிளகாயை போட்டு சில நொடிகள் வதக்கவும்.
- பின்னர் உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி விதைகளை சேர்த்து வதக்கவும்.
- உளுந்தம் பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பருப்புகள் பொன்னிறமாக மாறியவுடன், தீயை அணைத்து சிறிது பருப்பை ஆறவிடவும்.
- பின்னர் வேகவைத்த வாழைத்தண்டு, தேங்காய் மற்றும் ஆறவைத்த பொருட்களுடன் உப்பு, வெல்லம் மற்றும் புளித்தண்ணீர் சேர்த்து அரைத்துக் இன்னொரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
- மிதமான தீயில் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, எண்ணெய் சூடானதும் கடுகு சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் கறிவேப்பிலை மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
- அதன் உடைந்த மிளகாயை அதில் சேர்த்து தாளிக்கவும்.
- சுவையான வாழைத்தண்டு சட்னி ரெடி. இதை இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications