Latest Updates
-
சனி-சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம யோகம்: ஜூன் 25 முதல் இந்த 5 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டும்... -
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க..
வாழைப்பூ கட்லெட்
உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? அப்படியெனில் வாழைப்பூவைக் கொண்டு கட்லெட் செய்து கொடுங்கள். இந்த வாழைப்பூ கட்லெட் மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சற்று சுலபமாகவும் இருக்கும்.
உங்கள் வீட்டில் உள்ளோர் கட்லெட்டுகளை விரும்பி சாப்பிடுவார்களா? அவர்களுக்கு வழக்கமாக செய்யும் கட்லெட்டுகளை விட, சற்று வித்தியாசமான கட்லெட் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைப்பூ உள்ளதா? அப்படியெனில் வாழைப்பூவைக் கொண்டு கட்லெட் செய்து கொடுங்கள். இந்த வாழைப்பூ கட்லெட் மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சற்று சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு வாழைப்பூ கட்லெட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பூ கட்லெட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வாழைப்பூ - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு - 2
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 8-10 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 5-6 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகு தூள்- 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* முட்டை வெள்ளைக்கரு - 1-2
* பிரட் தூள் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* வாழைப்பூவை பொடியாக நறுக்கி, அதை உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்த நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பின் வாழைப்பூவில் உள்ள அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்து, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வாழைப்பூவை சேர்த்து, சிறிது உப்பு தூவி கிளறி, 2 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின்பு மூடியைத் திறந்து கிளறி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு சில நொடிகள் கிளறி, எலுமிச்சை சாறு, மசித்த உருளைக்கிழங்கு, கறிவேப்பிலை சேர்த்து குறைவான தீயில் நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு முட்டையின் வெள்ளைக்கருவில் உப்பு சிறிது சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் குளிர வைத்த வாழைப்பூ கலவையை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டி, முட்டையில் நனைத்து, பிரட் தூளில் பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கட்லெட்டுகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், வாழைப்பூ கட்லெட் தயார்.
Image Courtesy: yummyoyummy



Click it and Unblock the Notifications
