Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
2 வாழைப்பழம் இருந்தா.. ஈவ்னிங் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Banana Adai Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அப்போது சத்தான அதே சமயம் சுவையான ஸ்நாக்ஸை செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வாழைப்பழம் உள்ளதா?
அப்படியானால் அந்த வாழைப்பழத்தைக் கொண்டு அடை செய்து கொடுங்கள். இந்த வாழைப்பழ அடை மிகவும் சுவையாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு வாழைப்பழ அடையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைப்பழ அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நேந்திரம் பழம் - 2
* வெல்லம் - 1 கப்
* தண்ணீர் - 2 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன் + 3 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10 (பொடியாக நறுக்கியது)
* உலர் திராட்சை - சிறிது
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* ரவை - 1/2 கப்
* அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வாழைப்பழத்தை துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் வாழை இலையை எடுத்து, அதை நெருப்பில் லேசாக வாட்டி எடுத்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து,
அதில் 2 கப் நீரை ஊற்றி, வெல்லத்தை கரைய வைக்க வேண்டும். வெல்லம்
கரைந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், முந்திரியைப் போட்டு வறுக்க வேண்டும். முந்திரி
லேசாக நிறமாறத் தொடங்கியதும், அதில் உலர் திராட்சையை சேர்த்து கிளறி,
திராட்சை உப்பி வந்ததும், அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும்,
வாழைப்பழத்தை சேர்த்து, நன்கு வதக்க வேண்டும். வாழைப்பழத்தின் நிறம்
மாறத் தொடங்கியதும், அதில் துருவிய தேங்காயை சேர்த்து மிதமான தீயில்
வைத்து, வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ரவையை சேர்த்து நல்ல மணம் வந்து, நிறம் மாறும் வரை
வறுக்க வேண்டும்.
* பின் அதில் அரிசி மாவை சேர்த்து, கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் உப்பு, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி, வெல்ல நீரை
வடிகட்டி ஊற்றி கிளறி விட வேண்டும்.
* கலவையில் உள்ள நீர் சுண்டி ஓரளவு கெட்டியாகத் தொடங்கியதும், அதில்
ப்ரை செய்து வைத்துள்ள முந்திரி திராட்சையை சேர்த்து கிளறி, 2 டேபிள்
ஸ்பூன் நெய்யையும் ஊற்றி கிளறி விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் தீயில் வாட்டிய நீளமான வாழை இலையை எடுத்து, சிறு சிறு
துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாழை இலையை எடுத்து, அதன் நடுவே தயாரித்து வைத்துள்ள அடை
கலவையை வைத்து, மடித்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து
இலைகளிலும் அடை கலவையை வைத்து மடித்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக இட்லி தட்டில் மடித்த இலைகளை வைத்து, இட்லி
பாத்திரத்தினுள் வைத்து 5 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான
வாழைப்பழ அடை தயார்.



Click it and Unblock the Notifications
