Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
பக்ரீத் ஸ்பெஷல்: பாதாமி மட்டன் குருமா
Bakrid 2023: தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வரப்போகிறது. பக்ரீத் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது தான் பிரியாணி தான். ஆனால் இந்த பக்ரீத் பண்டிகை அன்று வெறும் பிரியாணியை மட்டும் செய்யாமல், அதற்கு சைடு டிஷ்ஷாக பாதாமி மட்டன் குருமாவை செய்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.
இந்த பாதாமி மட்டன் குருமா பிரியாணி மற்றும் சாதத்துடன் மட்டுமின்றி, நாண், சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு பாதாமி மட்டன் குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாதாமி மட்டன் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* கிராம்பு - 4-6
* பட்டை - 1 இன்ச்
* மிளகு - 6-8
* பச்சை ஏலக்காய் - 3-4
* கருப்பு ஏலக்காய் - 2
* முந்திரி - 10-12
* பாதாம் - 15-20
* பெரிய வெங்காயம் - 1 கப் (நறுக்கியது மற்றும் பொன்னிறமாக
வதக்கியது)
குருமாவிற்கு..
* நெய் - 4 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* மட்டன் - 1 கிலோ
* இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் பேஸ்ட் - 4 டீஸ்பூன்
* தயிர் - 1 கப் (1 டேபிள் ஸ்பூன் மைதா சேர்த்து கலந்தது)
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* குங்குமப்பூ - 10-12 (2 டேபிள் ஸ்பூன் நீரில் ஊற வைத்தது)
* கொத்தமல்லி - சிறிது (அலங்கரிக்க)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய்
ஊற்றி வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வறுத்து
அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து நல்ல மணம்
வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் மற்றும் வதக்கிய
வெங்காயத்தை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும்
நெய் சேர்த்து சூடானதும், மட்டன் துண்டுகளை சேர்த்து உயர் தீயில்
வைத்து 8-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த மசாலா, இஞ்சி பூண்டு மிளகாய் பேஸ்ட் சேர்த்து
3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் தயிர், மல்லித் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்
தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்த கிளறி, 3-4 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* அடுத்து அதில் 2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து ஒரு மணிநேரம்
மட்டனை வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும் போது அவ்வப்போது
கிளறி விட வேண்டும்.
* மட்டன் நன்கு வெந்ததும், குங்குமப்பூ ஊற வைத்த நீரை சேர்த்து கிளறி,
வேண்டுமானால், சிறிது நீரை ஊற்றி கிளறி, கொதிக்க வைத்து இறக்கி, மேலே
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பாதாமி மட்டன் குருமா தயார்.
Image Courtesy: cookpad



Click it and Unblock the Notifications








