Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
10 நிமிசத்தில் பருப்பே இல்லாமல் செய்யக்கூடிய பேச்சுலர் சாம்பார் ரெசிபி... செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கும்...!
Bachelor Sambar Recipe in Tamil: தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான சைடிஷ் என்றால் அது சாம்பர்தான். சாம்பாரையும், நம்மையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சாதமாக இருந்தாலும் சரி, இட்லி, தோசையாக இருந்தாலும் சரி சாம்பார் இல்லாமல் நம்மால் சாப்பிட முடியாது. சாம்பார் தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் விருப்பமான உணவாக இருக்கிறது. சாம்பார் பொதுவானதாக இருந்தாலும் ஒவ்வொரு ஏரியாவுக்கும் சாம்பார் செய்வதற்கென தனிப்பட்ட வழிமுறைகள் உள்ளது.
தமிழ்நாட்டிலேயே பலவகை சாம்பார் உள்ளது. காரைக்குடி சாம்பார், மெட்ராஸ் சாம்பார், கும்பகோணம் சாம்பார் என பலவகை சாம்பார்கள் உள்ளது. இந்த ஒவ்வொரு சாம்பாரும் ஒரு விதத்தில் தனித்துவமானது. அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போவது பேச்சுலர் சாம்பார். தனியாக தங்கியிருக்கும் பேச்சுலர்கள் மிகவும் எளிதில் 15 நிமிடத்தில் செய்யக்கூடியதாக இருப்பதால் இது பேச்சுலர் சாம்பார் என்று அழைக்கப்படுகிறது.

வீட்டில் வைப்பது போல நீண்ட நேரம் தேவைப்படும் சாம்பார் வைக்காமல் இதுபோல வித்தியாசமன மற்றும் எளிமையான சாம்பார் வைப்பது தனியாக இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் தனியாக இருப்பவர்கள் எளிதாக செய்யக்கூடிய மற்றும் சாதத்துக்கு வேற லெவலில் இருக்கும் சுவையான பேச்சுலர் சாம்பாரை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
- பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
- நீளமாக கீறிய பச்சை மிளகாய - 1
- நறுக்கிய தக்காளி - 2
- சாம்பார் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
- கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் அதில் உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின்னர் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
- பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
- பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு குழையும் வரை வதக்க வேண்டும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் அதில் சாம்பார் பொடி சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.
- பிறகு சர்க்கரை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
- கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறினால் சூப்பரான பேச்சுலர் சாம்பார் தயார்.
- இது சாதத்தில் ஊற்றி சாப்பிடவும், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications











