Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
1 கப் அவலும், கொஞ்சம் தயிரும் இருந்தா 10 நிமிசத்துல இந்த மாதிரி வடை செய்யுங்க... மொறுமொறுனு செமையா இருக்கும்!
Aval Vadai Recipe in Tamil: நமக்கு மிகவும் பிடித்த அதுவும் எளிதில் செய்யக்கூடிய ஒரு தின்பண்டம் என்றால் அது வடைதான். டீக்கடைக்கு சென்றாலே நம் கண்களும், கைகளும் வடையை நோக்கித்தான் செல்லும். அந்த அளவிற்கு வடை நம் வாழ்க்கையில் பிரிக்க முடியாத ஒரு உணவாக மாறிவிட்டது. பொதுவாக வடை என்றால் அது உளுந்த வடை அல்லது பருப்பு வடைதான். ஆனால் எந்த பருப்பும் இல்லாமலேயே ஒரு சுவையான வடையை செய்து விடலாம்.
முக்கியமாக இந்த வடையை செய்வதற்கு நீங்கள் பருப்பை ஊறவைத்து விட்டு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சில நிமிடங்களில் இந்த சுவையான வடையை செய்து விடலாம். இந்த வடையை செய்வதற்கு உங்கள் வீட்டில் அவலும், தயிரும் இருந்தால் போதுமானது. ஒரு தடவை இந்த வடையை செய்து விட்டால் அதன்பின் அடிக்கடி இந்த வடையை செய்ய நீங்களே விரும்புவீர்கள். இந்த வடை அந்த அளவிற்க்கு சுவையாக இருக்கும்.

உங்களுக்கு அவலை வைத்து எப்படி வடை செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் வடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் அவல்
- ¼ கப் தயிர்
- 2 பச்சை மிளகாய்
- ஒரு சிறிய துண்டு இஞ்சி
- 3 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
- சிறிதளவு கறிவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி இலைகள்
- ¼ கப் துருவிய கேரட்
- பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- அவலைக் கழுவி, ஒரு வடிகட்டியை வைத்து தண்ணீரை வடிய விடவும்.
- தண்ணீர் நன்றாக வடிந்ததும் அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.
- அதில் ¼ கப் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை 15 நிமிடங்கள் மூடி வைத்து ஊற விடவும்.
- பிறகு மூடியை திறந்து ஒரு கரண்டியால் நன்றாக மசிக்கவும். அதில் 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பச்சை மிளகாய் விழுது, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை மற்றும் துருவிய கேரட் சேர்க்கவும்.
- ஒருவேளை நீங்கள் வெங்காயம் சேர்க்க விரும்பினால் ஒரு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்கவும்.
- இப்போது அரிசி மாவு மற்றும் தேவையான உப்பு சேர்க்கவும். தேவைப்பட்டால், 1-2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் தெளித்து, கெட்டியான மாவாகப் பிசையவும்.
- உங்கள் கைகளில் எண்ணெய் தடவி, மாவில் இருந்து ஒரு சிறிய பகுதியை எடுக்கவும். வடை போல கைகளில் தட்டிக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் தட்டி வைத்திருக்கும் வடையை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக மாறும் வரை வறுத்தெடுக்கவும்.
- ஒரு டிஸ்யூ பேப்பரில் போட்டு எண்ணெய் வடிந்ததும் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications