Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
கொங்குநாடு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
Kongunadu Special Arisi Paruppu Sadam Recipe In Tamil: மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க வேண்டுமா? அதுவும் சைடு டிஷ் எதுவும் செய்யாமல், ஒன்-பாட் ரெசிபியாக செய்ய வேண்டுமா? அப்படியானால் வீட்டில் 2 கப் அரிசியும், 1 கப் துவரம் பருப்பும் இருந்தால், அரிசி பருப்பு சாதத்தை செய்யுங்கள்.
இந்த ரெசிபி கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற கொங்குநாட்டு பகுதிகளில் மிகவும் பிரபலமானது. இந்த அரிசி பருப்பு சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடும் போது, சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். மேலும் இது ஒரு மிகச்சிறந்த லன்ச் பாக்ஸ் ரெசிபியாகவும் இருக்கும்.

உங்களுக்கு கொங்குநாடு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கொங்குநாடு ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொன்னி அரிசி - 2 கப்
* துவரம் பருப்பு - 1 கப்
* எண்ணெய் - 3 ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)
* பூண்டு - 10 பல் (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 7
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* குழம்பு மசாலா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 6 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் அரிசி மற்றும் 1 கப் துவரம்
பருப்பை எடுத்து நீரில் 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு பற்களை
சேர்த்து நன்கு வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, 3
கப் அரிசி பருப்புக்கு 6 கப் நீரை ஊற்றி கலந்து, நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* நீர் நன்கு கொதித்ததும், அதில் ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பை
நன்கு கழுவி சேர்த்து கிளறி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பை
சேர்த்து கலந்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான கொங்குநாடு ஸ்பெஷல்
அரிசி பருப்பு சாதம் தயார்.



Click it and Unblock the Notifications