Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்க தலைமுடி எலிவால் மாதிரி மாறுதா? அப்ப அடிக்கடி இந்த கற்றாழை ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
Gandhi Jayanti 2026: மகாத்மா காந்தியை பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் அவர் படிப்பில் எப்படிப்பட்டவர் தெரியுமா? -
மீல் மேக்கர் பிரியாணியை இப்படி செய்யுங்க.. மட்டன் பிரியாணியே தோத்துடும்.. -
4 கத்திரிக்காய் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி மிளகு குழம்பு செய்யுங்க - டேஸ்ட் அருமையா இருக்கும் -
International Day of Older Persons: பெற்றோர், முதியோருக்கான சுகாதார பராமரிப்பில் புதிய அணுகுமுறை - ஏன் அவசியம் -
குரு-செவ்வாய் கூட்டணி.. அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
கத்திரிக்காய் வாங்குனா இந்த அரைச்சுவிட்ட மசாலா குழம்பை ட்ரை பண்ணுங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும்
Ariachuvitta Kathirikkai Kulambu Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் மதிய வேளையில் என்ன சமைப்பது என்று தெரியாமல் இருப்பீர்களா? அப்படியானால் ஒரு நாள் மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிட ஏற்றவாறு ஒரு அட்டகாசமான குழம்பு செய்யுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் கத்திரிக்காய் இருந்தால், அவற்றை வைத்து வழக்கமான குழம்பு மாதிரி இல்லாம ஒரு அட்டகாசமான குழம்பு செய்யுங்கள்.

இந்த அரைச்சுவிட்ட கத்திரிக்காய் குழம்பு இதுவரை நீங்கள் சாப்பிட்ட கத்திரிக்காய் குழம்பிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். கத்திரிக்காயை இந்த ஸ்டைலில் செய்தால் கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். இந்த குழம்பு சுவையாக இருப்பதுடன் செய்வதற்கும் மிகவும் எளிதானதாக இருக்கும்.
உங்களுக்கு அரைச்சுவிட்ட கத்திரிக்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அரைச்சுவிட்ட கத்திரிக்காய் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய் - 6
- தக்காளி - 1
- பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
அரைப்பதற்கு:
- துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
- பெரிய வெங்காயம் - 1
- இஞ்சி-பூண்டு விழுது - 1 ஸ்பூன்
- பட்டை - 1 சிறிய துண்டு
- கிராம்பு - 2
- கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி அளவு
- மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
- தனியா தூள் - 3/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தாளிக்க:
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- சீரகம் - 1/2 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
செய்முறை:
- கத்திரிக்காயை நன்றாகக் கழுவி நான்காகக் கீறவும். பயன்படுத்தும் வரை நீரில் மூழ்க வைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் பெரிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, கொத்தமல்லி, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பிரஷர் குக்கரில் அடிப்பகுதியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் சீரகம் ஆகியவற்றைத் தாளிக்கவும்.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தைச் சேர்த்து, அவை கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். அதனுடன் கறிவேப்பிலை மற்றும் கீறி வைத்துள்ள கத்திரிக்காயைச் சேர்த்து, கத்திரிக்காயின் தோல் லேசாகச் சுருங்கும் வரை வதக்கவும்.
- இப்போது அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது சற்று குழைந்து வரும் வரை வதக்கவும். இறுதியாகத் தண்ணீர் ஊற்றி, குறைந்த தீயில் வைத்து ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- ஆவி முழுமையாக அடங்கிய பிறகு மூடியைத் திறந்து, நன்றாகக் கலக்கவும். இறுதியாக பொடியாக நறுவிய கொத்தமல்லித் தழையைத் தூவி அலங்கரித்து அடுப்பை அணைத்தால் அட்டகாசமான அரைச்சு விட்ட கத்திரிக்காய் குழம்பு ரெடி.



Click it and Unblock the Notifications
