Latest Updates
-
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா
அங்கமாலி மாங்கா கறி ரெசிபி - இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க, வேற லெவல் சுவையில் இருக்கும்
Angamaly Manga Curry Recipe in Tamil: கோடைக்காலம் என்பதால் மாங்காய் தற்போது மிகவும் பரவலாக கிடைக்கும். பொதுவாக மாங்காயை வெறுமனே சாப்பிடலாம் அல்லது அதைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை செய்தும் சாப்பிடலாம். உங்களுக்கும், உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் மாங்காய் பிடிக்குமானால், அந்த மாங்காயை வாங்கி ஒருமுறை கேரளா பேமஸ் அங்கமாலி மாங்காய் கறியை செய்யுங்கள். இந்த அங்கமாலி ஸ்டைல் மாங்காய் கறி கேரளாவில் மிகவும் பிரபலமானதாகும். நீங்கள் வித்தியாசமான மாங்காய் குழம்பை செய்ய விரும்பினால் இந்த ரெசிபியை ஒருமுறை உங்கள் வீட்டிலும் செய்து, வீட்டில் உள்ளோரை அசத்துங்கள்.

இந்த மாங்கா கறியின் ரெசிபி பல இன்ஸ்டாகிராம் பக்கங்களில் உள்ளது. உங்களுக்கு அங்கமாலி மாங்காய் கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அங்கமாலிமாங்காய் கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1/2 கப் மாங்காய்
- 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 ஸ்பூன் தனியாத்தூள்
- 20 சின்ன வெங்காயம்
- 2 கீறிய பச்சை மிளகாய்
- அரை ஸ்பூன் நறுக்கிய இஞ்சி
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- அரை கப் திக்கான தேங்காய்ப்பால்
- தேவையான அளவு தண்ணீர்
- 2 வர மிளகாய்
செய்முறை:
- முதலில் நறுக்கிய மாங்காய், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கிளறவும். இதை 15 நிமிடம் அப்படியே ஊற விடவும்.
- ஒரு அகலமான கடாயில் 15 நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சேர்க்கவும்.
- இதை வெறும் கைகளால் நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- நன்கு பிசைந்த சின்ன வெங்காயத்துடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
- சின்ன வெங்காயக் கலவையுடன், ஊறவைத்த மாங்காய் துண்டுகள், அரை கப் தண்ணீர் மற்றும் 2 ஸ்பூன் தேங்காய்ப்பால் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- இதை அடுப்பில் வைத்து மிதமான தீயில், மாங்காய் நன்றாக வெந்து, கண்ணாடி பதத்திற்கு வரும் வரை, இந்த கலவையை 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- அடுப்பை அணைத்து மீதமுள்ள தேங்காய்ப் பாலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
- ஒரு தாளிக்கும் கரண்டியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். அதில் 5 நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, அவை பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து, சில வினாடிகள் வதக்கவும்.
- இந்த தாளிப்பை மாங்காய் கறியில் சேர்த்து, நன்றாகக் கலக்கவும்.
- அவ்வளவுதான் அங்கமாலி மாங்காய் கறி ரெடி. இதை சூடான சாதத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
