Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஆந்திரா ஸ்டைல் தக்காளி கார சட்னி ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...!
Andhra Tomato Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னிகள் அரைத்து போரடித்து விட்டதா? புதுசா ஏதாவது சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? அப்ப நம்ம அக்கட தேசமான ஆந்திரா ஸ்டைல் சைடிஷ்களை ட்ரை பண்ணி பாருங்க. வழக்கமான சட்னிகளுக்கு மாற்றாக சற்று காரமான அதே சமயம் புளிப்பான சட்னியை செய்ய வேண்டுமா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி வழக்கமாக செய்யும் தக்காளி சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் இருக்கும்.
ஏனென்றால் இந்த சட்னி பழுத்த தக்காளிகளுக்குப் பதிலாக பழுக்காத தக்காளியையும், வீட்டிலுள்ள எளிய பொருட்களையும் வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த சட்னி செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும். ஒருமுறை இந்த சட்னியை செய்து விட்டால், அதன்பிறகு அடிக்கடி செய்யத் தொடங்கி விடுவீர்கள். இந்த பதிவில் சுவையான ஆந்திரா ஸ்டைல் தக்காளி சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- 5 பழுக்காத சிறிய தக்காளி
- 2 ஸ்பூன் வேர்க்கடலை
- 5 சிவப்பு மிளகாய்
- 2 பச்சை மிளகாய்
- 1 சிறிய துண்டு புளி
- ½ ஸ்பூன் எள்
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி
- 1 ஸ்பூன் சீரகம்
- 4 பூண்டு பற்கள்
- தேவைக்கேற்ப உப்பு
- எண்ணெய் தேவையான அளவு
தாளிக்க:
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
- ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேர்க்கடலை, எள், சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்தது வதக்கவும்.
- 2-3 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
- பின்னர் கொத்தமல்லி இலைகள், சீரகம் மற்றும் புளி சேர்க்கவும்.
- கடலை நன்றாக வேகும் வரை வதக்கவும். பின்னர் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
- இதை ஒரு மிக்ஸி ஜாடிக்கு மாற்றவும். இப்போது வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நறுக்கிய பச்சை தக்காளியை சேர்க்கவும்.
- தக்காளி சுருங்கும் வரை சில நிமிடங்கள் சமைக்கவும். இதில் புளி சேர்த்து ஒரு நிமிடம் சமைக்கவும்.
- இதை முழுவதுமாக ஆற விடவும். முதலில் வேர்க்கடலை கலவையை அரைக்கவும்.
- பின்னர் தக்காளியைச் சேர்த்து சிறிது கரடுமுரடான பேஸ்டாக அரைக்கவும்.
- இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும்.
- இதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும்.
- கடுகு பொரிந்து , பருப்பு பொன்னிறமாக மாறியதும், அடுப்பை அணைக்கவும்.
- இதை சட்னியின் மேல் ஊற்றி நன்கு கிளறினால் சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பச்சை தக்காளி சட்னி ரெடி.
- இந்த பச்சை தக்காளி சட்னி இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications
