Latest Updates
-
ஆகஸ்ட் 19-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..! -
கவுண்டம்பாளையம் சிக்கன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 16 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனச்சுமை அதிகரிக்கப்போகுதாம் -
புதன்-குருபகவான் இணைப்பால் சூப்பர் ஸ்டாரா ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கோவா ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
வார ராசிபலன் (16 August 2026 - 22 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
காலிஃபிளவர் வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா, சூப்பரா இருக்கும் -
உணவு உண்ட பின் வாக்கிங் போகலாமா? டாக்டர் என்ன சொல்றாருன்னு பாருங்க.. -
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும்
மதியம் ஒருமுறை சாதத்துக்கு இந்த ஆந்திரா தக்காளி பருப்பு குழம்பை செய்யுங்க.. ருசி வேற லெவல்-ல இருக்கும்..
Andhra Thakkali Paruppu Kuzhambu In Tamil: மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? டக்கென்று சாதத்துக்கு ஒரு குழம்பு செய்ய வேண்டுமா? ஆனால் வீட்டில் காய் எதுவும் இல்லையா? கவலை வேண்டாம். வீட்டில் துவரம் பருப்பு இருந்தால், ஆந்திரா ஸ்டைல் தக்காளி பருப்பு குழம்பை செய்யுங்கள்.
இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிட்டால், சுவை மிகவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த பருப்பை சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். இந்த குழம்பு சமையலறையில் நீண்ட நேரம் நிற்காமல் சட்டென்று செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா தக்காளி பருப்பு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா தக்காளி பருப்பு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 100 கிராம்
* தக்காளி - 4
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 லிட்டர்
* எண்ணெய் - சிறிது
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வெங்காயம் - 1
* பூண்டு - 10 பல்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை குக்கரில் எடுத்து, நீரில் 2 முறை
கழுவிக் கொள்ள வேண்டும். பின் புளியை நீரில் ஊற வைத்து, அதை பிசைந்து
சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் கழுவிய துவரம் பருப்புடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,
சிறிது எண்ணெய் மற்றும் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மத்து கொண்டு லேசாக மசித்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு பற்களை
சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து 1 நிமிடம்
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை ஊற்றி,
பெருங்காயத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 5 நிமிடம்
கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான ஆந்திரா
தக்காளி பருப்பு குழம்பு தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications