Latest Updates
-
ராகுவின் ஆசியால் ஏப்ரல் 2027 வரை இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது! -
கேது சிம்ம ராசிக்குள் செல்வதால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஒருடைம் பசங்க லன்ச் பாக்ஸ்-க்கு இப்படி தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
கொங்கணி சுண்டல் மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. இல்ல முடி தான் டேமேஜ் ஆகும்! உஷார்.. -
பூமியின் உண்மையான எடை எவ்வளவு தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி கிலோவா? ஷாக் ஆகாதீங்க -
கல்யாண வீட்டு சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ஆண்களிடம் எப்போதும் கடுமையாக நடந்து கொள்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உணவு உண்ட பின் 90% மக்கள் செய்யும் தவறுகள் இதான்.. நீங்களும் இத பண்றீங்களா-ன்னு பாருங்க.. -
பெங்காலி முட்டை புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - வாசனை தெருவே மணக்கும்
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி ரெசிபி - இப்படி ட்ரை பண்ணுங்க - செம சைடிஷா இருக்கும்
Andhra Style Mullangi Pachadi Recipe in Tamil: பெரும்பாலான தென்னிந்திய வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை தான் இருக்கும். இதனால் ஒவ்வொரு நாளும் அதற்கு சைடு டிஷ்ஷை தேர்வு செய்வதே ஒரு பெரிய வேலையாக மாறுகிறது. இந்த பிரச்சினையை தீர்க்கத்தான் தொடர்ந்து பல்வேறு சட்னி ரெசிபிக்கள் நமது தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது ஆரோக்கியமான ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடியைத்தான். பொதுவாக காய்கறிகளை வைத்து சாதத்திற்குத்தான் சட்னி செய்வோம். ஆனால் இந்த முள்ளங்கி பச்சடி சாதத்திற்கு மட்டுமின்றி இட்லி, தோசைக்கும் சிறந்த சைடிஷாக இருக்கும். இந்த சட்னியை ஒருமுறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். அனைவருமே வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
உங்களுககு ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடியை எப்படி செய்வதன்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா முள்ளங்கி பச்சடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் துருவிய முள்ளங்கி
- ½ ஸ்பூன் மல்லி விதைகள்
- ½ ஸ்பூன் கடலைப்பருப்பு
- ½ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- சிறிய நெல்லிக்காய் அளவு புளி
- 5 வர மிளகாய்
- ¼ ஸ்பூன் வெந்தயம்
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 ஸ்பூன் எண்ணெய்
தாளிக்க:
- ½ ஸ்பூன் கடுகு
- ¼ ஸ்பூன் சீரகம்
- ¼ ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 1 ஸ்பூன் எண்ணெய்
செய்முறை:
- புளியை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து தனியாக வைக்கவும்.
- ஒரு கடாயில் ½ ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். மல்லி விதைகள், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் வெந்தய விதைகளைச் சேர்த்து வதக்கவும்.
- அவற்றை மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதை தனியாக எடுத்து ஆற வைக்கவும்.
- அதே கடாயில், வர மிளகாயைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கவும். அவற்றை கடாயிலிருந்து எடுத்து தனியாக வைக்கவும்.
- அதே கடாயில் மேலும் அரை ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். துருவிய முள்ளங்கி மற்றும் மஞ்சள் தூளைச் சேர்க்கவும்.
- மிதமான தீயில் வைத்து, பச்சை வாசனை போகும் வரை 5 நிமிடங்கள் வதக்கவும்.
- மூடி போட்டு, முள்ளங்கி மென்மையாகும் வரை அல்லது மேலும் 5 நிமிடங்கள் சமைக்கவும்.
- தீயை அணைத்துவிட்டு, கலவை ஆறும் வரை விடவும்.
- வறுத்த மல்லி விதை கலவையைத் தூளாக அரைத்துக்கொள்ளவும்; அதனுடன் வதக்கிய முள்ளங்கி, புளி மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, இதை சற்று கொரகொரப்பான விழுதாக அரைக்கவும். இது மிகவும் நைசான விழுதாக இருக்கக்கூடாது.
- தாளிப்பதற்கு ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் கடுகு, சீரகம் மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளிக்கவும்.
- கடுகு பொரிந்து அடங்கியதும், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். பிறகு அடுப்பை அணைத்துவிடவும்.
- தாளித்த கலவையைச் சட்னியின் மீது ஊற்றி நன்றாகக் கலக்கவும்.
- இந்த ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி பச்சடி சூடான சாதம், தோசை, இட்லி, உப்புமா அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
