Latest Updates
-
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரங்களை வெச்சு செய்யப்போகுது.. உஷார்.. -
கல்யாண வீட்டு தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அக்டோபர் 13 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமலை கொட்டப்போகுதாம் - என்ஜாய் பண்ணுங்க -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கப் சுண்டல் இருந்தா இந்த சத்தான பாலக் சன்னா மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
கீ போர்டில் Space பட்டன் மட்டும் ஏன் பெரிதாக உள்ளது? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
Navaratri 2026: நவராத்திரியின் போது இந்த 7 செயல்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க - அதான் உங்களுக்கு நல்லது -
ஐயங்கார் ஸ்டைல் சத்தான உளுந்து சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரமாதமா இருக்கும் -
இந்தியாவில் தங்கம் கிடைத்த 3 தங்க நதிகள் என்னென்ன தெரியுமா? இந்த நதிகள் எந்த மாநிலத்தில் ஓடுது தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாசம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
மாங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் ஊறுகாய் செய்யுங்க - சுருக்குனு சூப்பரா இருக்கும்
Andhra Style Grated Raw Mango Pickle in Tamil: ஊறுகாய் என்றாலே அனைவருக்கும் வாயில் எச்சில் ஊறும். காரமான மற்றும் புளிப்பான ஊறுகாய் சாம்பார் சாதம்ம் தயிர் சாதம் மற்றும் பழைய சாதம் என அனைத்திற்கும் அட்டகாசமான சைடிஷாக இருக்கும். ஊறுகாய்களில் பல வகைகள் இருந்தாலும் பெரும்பாலான மக்களுக்கு பிடித்தது மாங்காய் மற்றும் எலுமிச்சை ஊறுகாய்தான். தற்போது மாங்காய் சீசன் தொடங்கிவிட்டதால் மாங்காய் வாங்கி ஊறுகாய் செய்து பாருங்கள்.
ஆந்திரா உணவுகள் என்றாலே பொதுவாக காரசாரமாக சுவையாக இருக்கும். அதிலும் ஆந்திரா ஸ்பெஷலே அதன் சுவையான ஊறுகாய்தான். ஆந்திராவில் இந்த ஊறுகாயை போட்டு சாதத்தில் பிசைந்தே சாப்பிடுவார்கள். மாங்காய் ஊறுகாயிலும் பல்வேறு வகைகள் உள்ளது. பொதுவாக மாங்காய் ஊறுகாய் என்றாலே துண்டு துண்டுகளாக நறுக்கிதான் செய்வார்கள். ஆனால் மாங்காயை கேரட் போல துருவியும் சுவையான ஊறுகாய் செய்யலாம். இந்த ஊறுகாய் செய்வதற்கு மிகவும் எளிதானது அதேசமயம் சுவையும் அட்டகாசமானது.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் துருவிய மாங்காய் ஊறுகாயை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் துருவிய மாங்காய் ஊறுகாய் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் மாங்காய் (தோல் நீக்கி, தடிமனாகத் துருவியது)
- 4 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- ½ ஸ்பூன் வெந்தயம்
- ½ கப் நல்லெண்ணெய்
- 2 ஸ்பூன் கடுகு
- 2 பூண்டு பல்
- ¼ ஸ்பூன் பெருங்காயம்
- 2 கொத்து கறிவேப்பிலை
- தேவையான அளவு உப்பு
செய்முறை:
- வெந்தயத்தை நறுமணம் வரும் வரை லேசாக வறுக்கவும். அது ஆறியதும், மிக்சியில் போட்டு தூளாக அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கிண்ணத்தில், துருவிய பச்சை மாங்காய், காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் வறுத்த வெந்தயத் தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, அத்துடன் உப்பையும் சேர்க்கவும்.
- பின்னர் 2 ஸ்பூன் உப்பு சேர்த்து, அனைத்தையும் நன்றாக கலக்கவும். சுவையை சரிபார்த்து, மாங்காயின் புளிப்புத்தன்மைக்கு ஏற்ப தேவைப்பட்டால் மேலும் உப்பு சேர்த்துக்கொள்ளவும். இந்தக் கலவையை குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே ஊறவிடவும்.
- ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு சேர்த்து அது வெடித்துப் பொரியும் வரை காத்திருக்கவும்.
- பின்னர் நசுக்கிய பூண்டுப் பல்லைச் சேர்த்து, அது பொரிந்து நிறம் மாறத் தொடங்கும் வரை வதக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். பின்னர் அதை ஆறவிடவும்.
- மசாலா கலந்த துருவிய மாங்காய் கலவையில், ஆறவைத்த தாளிப்பைச் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த ஊறுகாயைச் சுத்தமான ஜாடிகளில் நிரப்பவும். இந்த ஊறுகாய் குளிர்சாதனப் பெட்டியில் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
- இதை சாதத்திற்கு சைடிஷாக வைத்தும் சாப்பிடலாம் அல்லது சாதத்தில் போட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications
